Top 5 Rajeshkumar Crime Novels in Tamil

தமிழகத்தில் க்ரைம் கதைகள் என்றால் வாசகர்கள் உச்சரிப்பது "ராஜேஷ்குமார்" என்ற பெயரையே. ராஜேஷ்குமார் ஆயிரக்கணக்கில் கிரைம் கதைகளை எழுதியுள்ளார். பலரது நீண்ட தூரப் பயணம், தனிமை நேரங்கள், சுவாரஸ்ய பொழுதுபோக்கிற்கு தோழனாக இருந்தவை இந்த நாவல்கள். இதில் நான் படித்தது சிறிதளவே. ஆனால், அவற்றில் மிகுந்த சுவாரஸ்யத்தையும், வாசிப்பிற்கு பிள்ளையார் சுழி போட விரும்புபவர்களுக்கு ஏற்ற ஐந்து நாவல்கள் பற்றி இங்கே.. அதிரடி ஆட்டம் : - க்ரைம் கதைகள் பல தளங்களில் அமைத்து எழுதப்படுபவை. அதில்... Continue Reading →

Featured post

வாசிப்பு!!

வணக்கம் நண்பர்களே.. தொடக்கமே வாசிப்புனு போட்டுட்டு, என்னடா எல்லாரும் சொல்ற மாதிரி, பாடப்புத்தகத்த வாசிக்க சொல்லிருவாங்களோனு நினைச்சு பயந்திராதிங்க! இது பாடப்புத்தகத்தையும் தாண்டிய வாசிப்பு. இந்த வாசிப்பு பழக்கம் தான் பெரியார், அண்ணா, அப்துல் கலாம், காந்தி மற்றும் நேரு போன்ற பெரிய மனிதர்களை உலகிற்கு அடையாளம் காட்டுச்சு. “ஊருக்கு நல்லது சொல்வேன்” புத்தகத்திலிருந்து சில உண்மை வரிகள். உலக வரலாற்றில் சில புத்தகங்கள் சரித்திர நதியின் போக்கையே மாற்றி இருக்கிறது. ஒரு சில புத்தகங்கள் மனித... Continue Reading →

Featured post

DAY03 | நம்ருதாவின் நாள்..

இடம் : கல்யாண ரிசப்ஷன் மணமேடையில் நின்றிருந்த மணமக்களான ஈஸ்வர்-நம்ருதா போட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர். அதே வேளையில் நம்ருதாவிற்கு ஒரு போன் வருகிறது. நூறு நாளில் நம்ருதாவின் வாழ்வில் விபரீதம் நிகழப் போவதாக அந்தக் குரல் மிரட்டிவிட்டு போனை வைக்கிறது. அதிர்ந்த அவள் ஈஸ்வரிடம் விசயத்தைச் சொல்ல அவன் அவளை சமாதானப்படுத்துகிறான். ஆனால் அடுத்த நாள் அதே நபரிடம் இருந்து மீண்டும் ஒரு போன் வருகிறது. சந்திரவதனம் இவர்களுக்கு ஒரு கிப்ட் அனுப்பியிருந்தான். கலக்கத்துடன் அந்த கிப்ட்டைப்... Continue Reading →

DAY02 | ரெட் ரோஸ் கெஸ்ட் ஹவுஸ்.!!

முதலமைச்சர் சத்தியவதியின் மகளும் மருமகனும் கடத்தப்பட்ட வீடியோ கேசட்டைப் பார்த்து திடுக்கிட்டான் விவேக். இடம் முதலமைச்சரின் வீடு. ‘நாளைய பாரதம்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இவர்களைக் கடத்திப் பிணையாக வைத்துக்கொண்டு சில கோரிக்கைகளை முதலமைச்சரின் முன் வைக்கிறார்கள். ரெட்ரோஸ் கெஸ்ட் ஹவுஸிற்குச் சென்றிருந்த முதலமைச்சர் மகளும் மருமகனும், 6 காவலாளிகளும் கடத்தப்பட்டிருந்தனர். முதலில் அந்த கெஸ்ட் ஹவுஸில் இருந்து விசாரணையை ஆரம்பிக்க நினைக்கிறான் விவேக். அதற்கு முன்னரே கெஸ்ட் ஹவுஸில் விபரீதம் ஆரம்பித்திருந்தது. அதே வேளையில் பணக்காரர்களைக்... Continue Reading →

DAY01 | அமிர்தம் என்றால் விஷம்..!

காரில் இறந்து கிடந்த அமைச்சர் கார்மேகவண்ணனைப் பார்த்ததும் ரிப்போர்ட்டரான பாரி திடுக்கிட்டான். உள்ளே அமைச்சரின் பிறந்தநாள் விழாவிற்கான ஏற்பாடுகள் வெகுவிமரிசையாக நடந்துகொண்டிருக்க, சக ரிப்போர்ட்டரான நிருபமாவிடம் தான் பார்த்த நிஜத்தை கலக்கத்துடன் சொல்லிக்கொண்டிருந்தான் பாரி. பிறந்தநாள் இறந்தநாளாக மாற, அமைச்சரின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர்களுக்கு அதிர்ச்சி. ‘அமிர்தம் என்றால் விஷம்’ என்ற எழுத்துக்கள் அமைச்சரின் முதுகில் பச்சை குத்தப்பட்டிருந்தது. கார்மேகவண்ணனின் மகன் செழியனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டும் எந்த துப்பும் கிடைக்காமல் போகவே, கேஸை வேறொரு... Continue Reading →

ராஜேஷ்குமார் நாவல்கள் – 10 Day Challenge

ராஜேஷ்குமாரின் தொடர்கதைகளை வழங்க இயலாத காரணத்தால், நாங்கள் உங்களுக்காக 10 சிறந்த, விறுவிறுப்பைத் தரக்கூடிய, மதிப்புமிக்க க்ரைம் நாவல்களைப் பற்றிய அறிமுகத்தைத் தர உள்ளோம். 10 நாட்கள் தொடரும் இந்த சவால் நாளை முதல் தொடங்க உள்ளது. ஒரு நாள் ஒரு நாவல். படித்து மகிழ்ந்திருங்கள். இணைந்திருங்கள் one minute one book உடன். #one_minute_one_book #tamil #book #review #crime_novel #rajeshkumar #10_day_challenge

நீ..நான்..தாமிரபரணி.!

25 வருடங்களுக்கு முன்.. காதலை மையப்படுத்தி சேதுபதி எழுதிய நீ..நான்..தாமிரபரணி.. நாவல் வெகுவாகப் பிரபலமாகிறது. ஆனால், சில நாட்களிலேயே நாவல் எழுதிய ரைட்டர் சேதுபதி காணாமல் போகிறார். ரைட்டரைத் தேடிச் சென்ற சிலருக்கு பெரிய இடத்தில் இருந்து மிரட்டலும் எச்சரிக்கையும் வந்த வண்ணம் இருக்கிறது. 25 வருடங்களுக்குப் பிறகு.. சேதுபதியைத் தேடும் பொறுப்பை தன்னுடைய “உண்மை” பத்திரிக்கையின் துடிப்பான ரிப்போர்ட்டரான அருணிடம் ஒப்படைக்கிறார் ஆசிரியர் அம்பலவாணன். அவரும் ஒரு காலத்தில் சேதுபதியைத் தேடச் சென்று எதிரிகளின் கோபத்தை... Continue Reading →

ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது..?!

பிறந்த வீட்டிலிருந்து தன்னுடைய வீட்டிற்கு அன்று அதிகாலை தங்கை விஜயாவுடன் வந்து சேர்கிறாள் தாரிகா. நான்கு நாட்களுக்கு முன்பே கணவன் புஷ்பராஜ் வேலை விஷயமாக திருவனந்தபுரம் செல்வதாக தாரிகாவிற்குத் தகவல் தந்து விட்டுச் செல்கிறான். தன்னிடமிருந்த சாவியை உபயோகித்து பூட்டியிருந்த வீட்டிற்குள் நுழைந்த தாரிகா, சுவரில் இருந்த ரத்தத் துளிகளைப் பார்த்துத் திகைத்தாள். போலீசிற்குத் தகவல் தெரிவித்த அவள், கலக்கத்துடன் காத்திருந்தாள். ரத்தத் துளிகளைத் தொடர்ந்து சென்ற போலீஸ், வீட்டிற்குப் பின்புறம் தோட்டத்தில் மண் இளகியிருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர்.... Continue Reading →

ஜீவா ஜீவா ஜீவா

டாக்டர் மகேந்திரனும் கம்ப்யூட்டர் ஸ்டுடென்ட்டான லலிதாவும் இரவுபகலாக உழைத்து, மிகவும் கஷ்டப்பட்டு ஜீவா என்னும் கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்திருந்தனர். மனிதனின் மூளையை விட பத்து மடங்கு அதிகமாக சிந்திக்கும் திறனுடைய ரோபோ (ஜீவா) இப்போது இருப்பது Indian Institute of Science-ல். டெல்லியில் இருந்து Indian Institute of Science செமினாருக்குக் கலந்துகொள்ள வந்திருந்த புரபொசர் தன்பாலும் மித்ராவும் ஜீவாவை சந்திக்க விரும்பினர். ஜீவாவின் செயல்திறனைப் பார்த்து வியந்த மித்ரா ஆக்கப்பூர்வமான இந்தக் கண்டுபிடிப்பு அழிக்கப்பட வேண்டியது என்று... Continue Reading →

விவேக் வியூகம்

சேறும் சகதியுமாக இருந்த ரோட்டில் மிட்நைட்டில் பைக்கில் போய்க்கொண்டிருந்த மங்களேஷும் பாசுவும் விஜிலன்ஸ் ஆபிசர் சுக்தேவ்வை திட்டிக்கொண்டே சென்றனர். இதுவரை இரவில் இப்படி அழைத்திராத சுக்தேவ் திடீரென அழைத்ததற்கான காரணம் புரியாமல் அவர் வீட்டை அடைந்தனர். வீட்டிற்குள் செல்லும் முன்... நாட்டின் மொத்த கரன்சி நோட்டுக்களையும் பிரிண்ட் செய்யும் இண்டியா செக்யூரிட்டி பிரஸ்ஸில் (நாசிக்) எலெக்ட்ரானிக் இன்ஜீனியர்ஸாக வேலை பார்க்கும் இருவரும் சுக்தேவ் வீட்டை அடைந்த பொழுது உட்கார்ந்த நிலையில் அப்பொழுது தான் ரத்தம் சிந்தி அவர்... Continue Reading →

கொன்றாள்..கொன்றான்..கொன்றேன்..

மங்களூர் எக்ஸ்பிரஸ் வேகமாகப் போய்க்கொண்டிருக்க அந்தக் கூபேயில்  ஹரிபாபுவும் மேத்தாவும் மட்டுமே பயணித்துக்கொண்டிருந்தனர். டிக்கெட் செக் செய்ய வந்த டிடிஈ மோகன்ராஜை கூட்டு சேர்த்துக் கொண்டு குடித்து கும்மாளம் போட்டுக்கொண்டே வந்தனர். டிடிஈ-க்கு போதை அதிகமாகவே தங்களுடைய திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தனர் மேத்தாவும் ஹரிபாபுவும். கடத்திக் கொண்டுவந்திருந்த தங்க பிஸ்கெட்டுகளை டிடிஈ மோகன்ராஜின் பெட்டிக்குள் மறைத்து வைக்க உதவி கேட்கின்றனர். பயந்துகொண்டே ஒப்புக்கொண்ட டிடிஈ-யை இருவரும் சேர்ந்து சமாதானப்படுத்துகிறார்கள். இந்நிலையில் அடுத்த ஸ்டேஷனில் ஏறிய போலீஸ் மேத்தா-ஹரி... Continue Reading →

வளசரவாக்கம்/ராஜபாளையம்/விருதுநகர் புத்தகக் கண்காட்சி 2021

வளசரவாக்கம் புத்தகக் கண்காட்சி 2021 இடம் : ஸ்ரீசாய் மஹால், கேசவர்த்தினி பேருந்து நிறுத்தம் அருகில், வளசரவாக்கம் நாள் : ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 5 வரை நேரம் : காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தள்ளுபடி : 10% மேலும் விபரங்களுக்கு : 98843 55516 ராஜபாளையம் புத்தகக் கண்காட்சி 2021 நடத்துபவர் : மதுரை மீனாட்சி புக் ஷாப் இடம் : காந்தி கலை மன்றம், ராஜபாளையம்... Continue Reading →

பகடைக் காய்கள்..!

அண்டை நாடுகளுடனான போரை விலக்கி சமாதானத்தை முன்னிறுத்த பாராளுமன்றத்தில் இருந்து பொறுப்புள்ள எம்.பிக்களைக் கொண்ட ஒரு குழு பயணிகளுடன் சேர்ந்து விமானத்தில் பறக்க இருந்தது. அந்தத் திட்டத்தை முறியடித்து 7 எம்.பிக்களுக்கும் 8 பயணிகளுக்கும் விமானத்திலேயே சமாதி கட்டுவது தான் திட்டம். உஸ்மானும் பாபுராவும் முதலில் திட்டத்தை சொன்ன போது யோசித்த சென்னும் துவாரகேஷும் தொகை பெரிதாகப் பேசப்பட்டவுடன் இதற்கு ஒப்புக்கொண்டனர். இந்தத் திட்டத்திற்காக 25 கோடிக்கு விலை போன பைலட் சென்னும் கோ-பைலட் துவாரகேஷும் திட்டத்தை... Continue Reading →

ப்ராஜக்ட் ஃ

சின்ன வயசுல நாம எல்லாரும் புதையல் தேடிப் போற மாதிரியான சாகசக் கதைகளை ரொம்ப விரும்பிப் படிச்சிருப்போம். ஆனா, புதையலைப் பத்தி பெரியவங்களும் விரும்பிப் படிக்கற மாதிரி எழுதப்பட்ட ஒரு புத்தகம் தான் இந்த ப்ராஜக்ட் ஃ இந்தக் கதையோட ஹீரோ வில்லனோட ஆணையின்படி புதையலைத் தேட வேண்டிய கட்டாயத்துல இருக்கான். இறந்துபோன தன்னோட தாத்தா விட்டுட்டு போன குறிப்புகளை வெச்சு ஹீரோ புதையலைக் கண்டுபிடிக்கணும். புதையலின் குறிப்பை விட்டுச்சென்ற தாத்தா, அந்தப் புதையலால் வரும் ஆபத்தையும்... Continue Reading →

தப்பு செய்.! தப்பிச்செல்..!!

“குடுவைக்குள் இருந்து வெளியே எடுத்த 30 வினாடிக்குள் வெடிக்கும் ஒப்வா லசிகா ஒரு காந்தம் போன்று செயல்படக்கூடியது. டார்கெட் செய்த இடத்தில் இருக்கும் ஏதாவதொரு காரில் ஒட்ட வைத்துவிட்டால், பெட்ரோல் டாங்க் வெடித்து சேதாரம் அதிகமா இருக்கும் என்பதால் இந்த வெடிபொருள் தீவிரவாதிகளுக்கு மிகவும் பிடித்தமானதாக உள்ளது” என்ற தகவல் லலித் சர்மாவின் அடிவயிற்றைக் கலக்கியது. இந்தியாவின் இராணுவ ஏர் மார்ஷல் பிலிப்ஸ் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாக ரகசியமாக ரோமிற்கு வந்து இத்தாலியின் இராணுவ... Continue Reading →

சென்னை & விருதுநகர் புத்தகக் கண்காட்சி 2021

சென்னை புத்தகக் கண்காட்சி 2021 இடம் : பாணி க்ரஹா மண்டபம், மேற்கு மாம்பலம் ஆரியகௌடா சாலை நாள் : ஆகஸ்ட் 18 வரை தள்ளுபடி : 10% மேலும் விபரங்களுக்கு : 98843 55516 விருதுநகர் புத்தகக் கண்காட்சி 2021 இடம் : ஏபிஆர் மஹால், ராமமூர்த்தி தெரு நாள் : செப்டம்பர் 12 வரை தள்ளுபடி : 10% மேலும் விபரங்களுக்கு : 88257 55682 #one_minute_one_book #tamil #book #review #book_fair #chennai... Continue Reading →

“பனுவல்” சிறப்பு புத்தக விற்பனை

இந்த ஆண்டு 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பனுவல் வழங்கும் சிறப்பு புத்தக விற்பனை, ஆகஸ்ட் 13 இன்று மதியம் 12 மணி முதல் ஆகஸ்ட் 15 மதியம் 11 மணி வரை நடைபெற உள்ளது. அனைத்துப் புத்தகங்களுக்கும் 10% சிறப்பு தள்ளுபடி. புத்தகங்களை இணையம் மற்றும் கடையில் பெற்றுக்கொள்ளலாம். Site : http://www.panuval.com Call/Whatsapp : 97890 09666 #one_minute_one_book #tamil #book #review #panuval #publisher #independence_day #india #special_discount

Up ↑