ஃபெலுடா

‘டிடெக்டிவ்’னு சொன்னதும் சிலருக்கு ஷெர்லாக் ஹோல்ம்ஸ் (Sherlock holmes), சினிமாப் பிரியர்களுக்கு கணியன் பூங்குன்றனும் புத்தில வந்து போவாங்க.

ஃபெலுடா..

சிலருக்கு இந்தப் பெயர் அறிமுகம் இல்லாததாகவும், சிலருக்கு அபிமான கதாப்பாத்திரமாகவும் தோன்றலாம்.

வங்காள எழுத்தாளர் சத்யஜித் ரேவின் தொடர்களிலும், நாவல்களிலும் பயன்படுத்தப்பட்ட பிரபலமான கதாப்பாத்திரம் தான் ஃபெலுடா.

சாதாரணமாக வங்கியில் வேலை செய்யும் இளைஞன், துப்பறியும் கதைகளைத் தேடிப் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ளவே தனது திறமைகளையும் சேர வளர்த்துக்கொள்கிறான்.

விடுமுறையில் டார்ஜிலிங்கில் தங்கியிருந்த நாட்களில் தற்செயலாக, அங்கு நடக்கும் மர்மங்களைத் துப்பு துலங்க தொடங்கி 35 நாவல்களில் சிறந்த துப்பறியும் நிபுணராக வளர்கிறார்.

ஒவ்வொரு நாவல்களின் களங்களும், நடக்கும் இடங்களுமே சுவாரஸ்யத்தைக் கூட்டும் பட்சத்தில் ஃபெலுடாவின் சாதுரிய நடத்தை படிப்பவர்க்கு விறுவிறுப்பையும் கூட்டும்.

இவருடன் தொப்ஷே, ஜடாயு இணையும் வெற்றிக் கூட்டணியும், கூர்ந்த பார்வையும், சார்மினார் சிகரெட்டும், குறிப்பேடும் இவரது தனித்துவம். தன் குழுவுக்காக குறிப்புகளை விட்டுக் காணாமல் போவதும், பொறுமையான அணுகுமுறையும், தர்க்க ரீதியான (logics) கருத்துக்களை ஒப்பிடுவதும் இவரது துப்பறியும் பாணி.

வங்கப்புலி மர்மம், தங்கக் கோட்டை, பிள்ளையாருக்குப் பின் மர்மம் போன்ற நாவல்கள் அதிக வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. வங்காள மொழியில் வெளிவந்த 35 நாவல்களில், 20 நாவல்கள் மட்டுமே வீ.பா.கணேசன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் ஃபெலுடா கதை வரிசைத் தொடர்களுடன் உங்களை சந்திக்கிறோம்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #satyajit ray #feluda

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: