வாடிக்கையாய் சில கொலைகள்

மர்மம்..

மர்மக்கதைகளுக்கு மக்களிடையே எப்பவுமே மவுசு குறையாது. ஒரு கொலைக்கான காரணத்தையோ, இல்ல ஒருத்தர் காணாமல் போனதுக்கான காரணத்தையோ, இல்ல புதையல் எதையாவது தேடிப்போறதையோ மையமா வெச்சு கதை அமைஞ்சிருக்கும். கதைகளில் ஏற்படுகிற நம்பமுடியாத திருப்பங்கள் (twist) ஒரே வரியைத் திரும்பத் திரும்பப் படிக்கும் அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

வாடிக்கையாய் சில கொலைகள்..

ஈராக்கில் அகழ்வாராய்ச்சி பண்ற குழுவுல அந்தக் குழுத் தலைவரோட மனைவி தனக்கு ஏதோ ஆபத்து இருக்கறதா நினைச்சு பயப்படறாங்க. அவங்க பாதுகாப்புக்காக ஒரு நர்ஸ்-அ வேலைக்கு வெக்கறாங்க. இந்த எடத்துல நீங்க யோசிக்கலாம்..ஆபத்து இருக்குன்னா போலீஸ் கிட்டதான உதவி கேக்கணும். ஆனா ஒரு நர்ஸ் எப்படி உதவி பண்ணமுடியும்னு..? இந்த எடத்துல தான் கதையோட ட்விஸ்ட்ஏ இருக்கு. இதற்கிடையில நர்ஸ் கிட்ட அந்தம்மா, தன்னோட பயத்துக்கான காரணத்தையும், தன் கடந்தகால வாழ்க்கையைப் பத்தியும் சொல்றாங்க. அவங்கள பயமுறுத்தற ஜன்னல்ல தெரிஞ்ச ஒரு கை, அப்புறம் வெளிறிய முகம், அவங்களுக்கு வர மிரட்டல் கடிதங்கள் எல்லாத்தையும் நர்ஸ் கிட்ட சொல்றாங்க. இது அவங்களுக்கு அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்துது.

இப்படி விறுவிறுப்பா போயிட்டு இருக்கும்போது திடீர்னு அவங்க மர்மமா கொலை செய்யப்படறாங்க. பழி ஒருத்தர் மேல விழப் போக அவங்களும் மர்மமா கொலை செய்யப்படறாங்க. குழம்பிப் போற போலீஸ், இந்தக் கொலையில இருக்கற மர்மத்தைக் கண்டுபிடிக்க ஒரு டிடெக்டிவ வரவழைக்கிறாங்க. இந்தக் கொலையை வெளிய இருந்து யாரும் பண்ணலனு சொல்லி அந்தக் குழுவுல இருக்கறவங்க தான் கொலை செஞ்சாங்கன்னு கண்டுப்பிடிக்கறாரு.

கொலைக்கான நோக்கம் என்ன? எதுக்காக ஒருத்தங்களோட உயிருக்கு பாதுகாப்பா போலீஸப் போடாம நர்ஸ் போட்டாங்க? பழி போடப்பட்ட நபர் எதுக்காகக் கொல்லப்பட்டார்? கொலைக்குற்றவாளி யாருன்னு கண்டுபிடிச்சாரா? இதுக்கான காரணத்தைத் தேடி மீதிக் கதை நகருது. கடைசி நூறு பக்கங்கள் படிப்பவருக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டுவதாக அமைகிறது.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime thriller #agatha christie #vaadikkayaai sila kolaigal

Sample book link : https://play.google.com/store/books/details/Agatha_Christie_Vadikkaiyai_Sila_Kolaigal?id=zdEoCgAAQBAJ

want to buy : https://www.commonfolks.in/books/d/vaadikkaiyaai-sila-kolaigal

One thought on “வாடிக்கையாய் சில கொலைகள்

Add yours

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: