ஈரோடு புத்தகத் திருவிழா (04-08-2019)

ஈரோடு புத்தகத் திருவிழாவின் மூணாவது நாளான இன்று நடந்த சொற்பொழிவு, புத்தகத்துக்கு கிடைச்ச மிகப்பெரிய விழிப்புணர்வு. இன்றைய தலைப்பு முதலாவதாக ‘வாசிக்கலாம் யோசிக்கலாம்’-இந்து தமிழ் திசை எடிட்டர் கே.அசோகன், இரண்டாவதாக ‘கற்றதைச் சொல்கிறேன்’-பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்.

மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் அறிமுக உரையாற்றினார். மேலும், சிகாகோவில் நடந்த தமிழ் முச்சங்க விழாவில் நடந்த அனுபவங்களையும், கூலித் தொழிலாளியின் புத்தகத்திற்கான நன்கொடை பற்றியும், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நாளை(05-08-2019) பங்கேற்கவிருக்கும் கேள்வி பதில் நிகழ்வு பற்றியும், முக்கியமாக 15-ம் ஆண்டை முன்னிட்டு 15,000 மரக்கன்றுகள் வழங்குவது பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

கே.அசோகன்..

வாசிப்பின் அவசியத்தைப் பற்றி பேசத் தொடங்கிய அவர், வாசிப்பின் சுவை பற்றியும், இந்து தமிழ் நாளிதழில் வெளிவரும் கட்டுரைகள் பற்றியும், காணொளி (video) வழி தகவல் பற்றியும், எழுத்து வழி தகவல் பற்றியும் கூறினார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்..

‘சிங்கம் களம் இறங்கிருச்சுங்கற மாதிரி’ தொடங்குனதுல இருந்து முடியற வரைக்கும் அரங்கமே அதிரும் அளவுக்கு சிரிப்பலைகள் கேட்டுகிட்டே இருந்துச்சு. நடைமுறை தமிழ்ல ஆரம்பிச்சு சங்க கால தமிழ் வரைக்கும் அலசிட்டாரு. கற்பதற்கும் படிக்கறதுக்கும் உள்ள வித்தியாசத்தை விளக்குன அவரு வைகைலருந்து பாற்கடல் வரைக்கும் அவரோட பேச்சுலயே கூட்டிட்டு போய்ட்டாரு. அவரு சொன்ன செய்யுள்களும், உவமைகளும் சங்க இலக்கியங்களை எளிதாக்கியதோடு ஆச்சரியப்படுத்தும் வகையிலயும் இருந்துச்சு.

சொற்பொழிவு முடிஞ்சுது. இந்த உரை விரைவிலேயே youtube-ல் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. பார்த்து பயன்பெறுக!!

#one minute one book #tamil #book #erode #book festival #vaasippu #sorpolivu

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: