இதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்…!

தம்பி..

சொல்லுங்கய்யா..

புதுசா ஒரு அக்கௌன்ட் ஓபன் பண்ணனும், யாருகிட்ட கேக்கனுங்க..?

அங்க பாருங்க..அங்க 2-ம் நம்பர் கவுண்ட்டர், அங்க போய் கேளுங்க சொல்லுவாங்க..

சரிங்க தம்பி..

(2-ம் நம்பர் கவுண்ட்டரில்)

சார்..

சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும்?

அக்கௌன்ட் ஒன்னு ஓபன் பண்ணனும்..?

அப்படியா? இப்போவேவா?

இல்ல சார், அக்கௌன்ட் ஓபன் பண்ண என்னலாம் தேவைன்னு கேட்டுட்டு போகலானுதான்..பிறகு தான் எடுத்துட்டு வரணும்..

அப்படியா..? அந்த 5-ம் நம்பர் கவுண்ட்டர்ல சொல்லுவாங்க போங்க..

உங்களுக்கு தெரியாதுங்களா..? அங்க கூட்டமா இருக்கு அதான்..

இருக்கற வேலை பத்தாதுன்னு இதுவேற (முணுமுணுத்தபடியே) உங்க ஆதார் கார்டு, பான் கார்டு, உங்க ரெண்டு போட்டோ கொண்டு வாங்க ஓபன் பண்ணிக்கலாம்..

‘பாங்க்’ கார்டுங்களா..?

பாங்க் இல்லய்யா..பான் கார்டு..

அப்படின்னா சார்..?

இதுகூட தெரியாதாய்யா உனக்கு..? இதெல்லாம் விளக்கறது என்னோட வேலை இல்ல. அங்க போய் கேளு. இப்ப வழிய விடு.

(அடுத்தவரிடம்..)

மேடம் உங்களுக்கு என்ன வேணும்..?

(தலை குனிந்தபடியே அந்தப் பெரியவர் நகர்ந்தார்).

இந்த உரையாடல் கற்பனையே..

ஒரு முக்கிய தகவலைப் பதியவைக்கவே இந்தக் காட்சி. பல பேருக்கு இது போன்ற வேறு சில அனுபவங்களும் இருக்கலாம். இதுபோன்ற கசப்பான அனுபவங்களையும், நேர விரயத்தையும் குறைக்கனும்னா..?

“இதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்”

ஆவணங்கள்!!

நம்மளோட வாழ்க்கையில ஆவணங்கள்(certificates/cards) எல்லாம் இப்போ அத்தியாவசிய தேவையா மாறிடுச்சு. ஒரு மனுஷன் பிறக்கும்போது தேவைப்படற பிறப்புச் சான்றிதழ்ல ஆரம்பிச்சு, இறக்கும்போது தேவைப்படற இறப்புச் சான்றிதழ் வரைக்கும் சான்றிதழின் பங்கு இன்றியமையாததா இன்னைக்கு இருக்கு.

தேவையோ…இல்லையோ…எல்லாத்தையும் வாங்கி ஃபைல்ல போட்டு வெச்சுக்கணும்..

சில முக்கியமான ஆவணங்கள் [பிறப்பு-இறப்புச் சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ்(legal hier certificate), இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை(ration card), ஓட்டுநர் உரிமம்(driving licence), மின்சார இணைப்பு, பாஸ்போர்ட், வாகனக் காப்பீடு(insurance), வாக்களர் அடையாள அட்டை(voter id card), சமையல் எரிவாயு இணைப்பு, நிரந்தர கணக்கு எண் அட்டை(pan card), கடன் அட்டைகள்(credit cards), ஆதார் அட்டை(aadhaar card)] பத்தியும், அதுக்கு விண்ணப்பிக்கற முறை பத்தியும் இந்த புத்தகத்துல நீங்க தெரிஞ்சிக்கலாம்.

ஒரு ஆவணத்துக்கு விண்ணப்பிக்க வேண்டிய விண்ணப்பம் எங்க கிடைக்கும்? விண்ணப்பிக்கும் நடைமுறை என்ன? எங்கு விண்ணப்பிக்க வேண்டும்? விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்? எவ்வளவு நாளில் ஆவணங்களைப் பெறலாம்? போன்ற அனைத்து தகவல்களும், ஒரு வழக்கறிஞரே(சி.பி.சரவணன்) அலசி ஆராய்ந்து எழுதியிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #govt certificates #idhaiyellam neenga kandippa therinjikkanum

want to buy : http://www.noolulagam.com/product/?pid=28463

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: