புராதன பொருட்களின் மீது ஆர்வமுள்ள ராஜன் பாபுவிற்கு வந்து சேரும் ஒரு கடிதம் அவரை திகிலடையச் செய்கிறது. திகிலுக்கு காரணம் அதிலிருந்த வார்த்தைகள் மட்டுமில்லை.

அந்தக் கடிதம் எழுதப்படாமல், செய்தித் தாள்கள் மற்றும் புத்தகத்தின் பக்கங்களைக் கிழித்து ஒட்டப்பட்டிருந்தது. இதன் மர்மம் புரியாமல் தன் நிம்மதியை இழந்து கொண்டிருந்த ராஜன் பாபுவிற்கு உதவ ஃபெலுடா அவ்விடம் வந்தார். அவரது சந்தேகப் படலம் ராஜன் பாபுவிற்கு பரிச்சயமான மூன்று பேரின் மீது விரிகிறது, கூடவே அவரது முதல் துப்பறியும் கதையும் விரிகிறது. குறிவைக்கப்படுவது ராஜன் பாபுவுக்கா? அவரது கலைப்பொருட்களுக்கா? என விசாரணை நகரும்போது ராஜன் பாபுவின் நிம்மதியைக் குலைக்கும் வகையில் நிகழும் கொலை முயற்சி.
இதற்கிடையில் ஃபெலுடா தனது முதல் கேஸின் மர்மத்தை உடைத்தாரா? தொப்ஷேவின் தகவல் உதவி அளித்ததா? முகமூடி அணிந்து வந்த மர்ம நபரின் பின்னணி என்ன? கடிதத்தை அனுப்பியது யார்? என்பதே ‘டார்ஜீலிங்கில் ஓர் அபாயம்’.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #satyajit ray #feluda #darjeelingil orr abayam
want to buy : https://www.commonfolks.in/books/d/darjeeling-oru-abhayam
Leave a Reply