ராஜேஷ்குமார்..
“க்ரைம் கதைகளின் மன்னன்” என்றழைக்கப்படும் ராஜேஷ்குமார் தமிழில் 1500-ம் மேற்பட்ட க்ரைம் நாவல்களையும், 2000-ம் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
க்ரைம் கதைகளையே ஏன் அதிகம் எழுதுகிறீர்கள் என்ற கேள்விக்கு, “நமது புராண, இலக்கியங்களில் மண்ணாசைக்கு மகாபாரதம்; பெண்ணாசைக்கு ராமாயணம் இருக்கிறது. இவ்வளவு ஏன் சிலப்பதிகாரம் கூட 50% க்ரைம் சப்ஜெக்ட் தான். இவைகளில் இல்லாத க்ரைமா? சாகாவரம் பெற்றிருக்கும் காவியங்களே க்ரைமை அடிப்படையாய் வைத்து புனையப்பட்டிருக்கும் போது சாமானியன் நான் மட்டும் எழுதினால் அது தவறா? என்பது ராஜேஷ்குமாரின் பதில்.
இவரின் க்ரைம் நாவல் மட்டுமல்லாமல், மக்களிடையே வரவேற்பைப் பெற்ற அர்த்தமுள்ள அரட்டையும், விளக்கம் ப்ளீஸ் விவேக்கும் ஒரு வித்தியாசமான முயற்சியாகும்.
இவரின் கதைத் தலைப்புகள் வித்தியாசமானதாகவும், கதைக்கு பொருத்தமானதாகவும் அமைந்து கதைக்கு ஒரு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. (எ.கா) -நிஷா நிஷா ஓடி வா, திக் திக் திலகா, குட் நைட் குரோதம், ஹலோ டெட் மார்னிங்.
விவேக்..விஷ்ணு..ரூபலா..
இவரின் முக்கிய கதைக் கதாப்பாத்திரங்களே விவேக், விஷ்ணு மற்றும் ரூபலா மிகவும் புகழ்பெற்றவை.
விவேகானந்தரின் நினைவாக விவேக்கும், வாசகிகியின் வேண்டுகோளுக்கிணங்க ரூபலாவும், நட்புக்காக விஷ்ணுவும் இவரின் கதாப்பாத்திரங்களாக மாறினர்.
விவேக், ஸ்காட்லாந்து யார்டில் சிறப்பு பயிற்சி பெற்ற க்ரைம் பிரான்ச் ஸ்பெஷல் ஆபிசர். ரூபலா, விவேக்கின் மனைவி. விஷ்ணு, விவேக்கின் உதவியாளர். கோகுல்நாத் மற்றும் அவினாஷ் இவர்களுக்கு அடுத்தபடியான கதாப்பாத்திரங்கள்.
மற்ற ராஜேஷ்குமார் நாவல்களை விட விவேக், விஷ்ணு மற்றும் ரூபலா போன்ற கதாப்பாத்திரங்கள் வரும் நாவல்கள் கதைக்கு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. வாசகர்கள் பெரும்பாலும் இந்தக் கதாப்பாத்திரங்கள் வரும் நாவல்களையே விரும்பிப் படிக்கின்றனர்.
விவேக்கின் அசத்தலான அப்சர்வேசனும், நையாண்டிப் பேச்சும், துணிச்சலான செயல்களும், மெருகேற்றப்பட்ட பிராண்டட் கதாப்பாத்திரம். இவர் வரும் கதைகளில் இவரே கதாநாயகன். விவேக், விஷ்ணு காம்பினேஷன் கதையின் சுதி குறையாமல் என்டர்டெயின்மென்ட்டாகவே கொண்டு போகும். ரூபலா குடுக்கும் டிப்ஸ் கதையில் திருப்பத்தை ஏற்படுத்தி விடும். மொத்தத்தில் விறுவிறுப்புக்கும், திருப்பங்களுக்கும், திகிலுக்கும் பஞ்சமே இருக்காது.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #rajeshkumar #crime novel #artthamulla arattai #vilakkam please vivek #vivek #vishnu #rubala #gokulnath #avinash
Drop your Thoughts