எல்லோரும் வல்லவரே

வல்லவர்கள்..

வல்லவர்னா யாரு? ஒரு சின்னக் கதை மூலமா விளக்கிடலாம்.

பரீட்சை நடக்குது, இந்த முறை நாட்டுக்காக. அரசாளக் கூடிய வல்லமை  மூன்று மகன்கள்ள யாருக்கு இருக்குன்னு தெரிஞ்சுக்க ஆசைப்படற அரசர், ஒரு முடிச்சு தானியங்கள் கொடுத்து, ஆறு மாசக் கெடுவோட மூணு பேரையும் காட்டுக்கு அனுப்பறாரு. மூத்தவர் ரெண்டு மாசத்திலயும், நடுவர் நான்கு மாசம் மட்டுமே தாக்கு பிடிக்க முடிஞ்சுது. நாம பேச வேண்டியது ஆறு மாசமும் தாக்கு பிடிச்ச வல்லவரைப் பத்தி, அவரோட யுக்தி-உற்பத்தி. கடைக்குட்டிக்கு முடிசூட்டப்பட்டது.

வல்லவரே என்றும் மதிக்கப்படுகிறார்கள். ஐன்ஸ்டீன், நியூட்டன், டெஸ்லா, கியூரி மற்றும் டார்வின் போன்ற ஆராய்ச்சியாளர்களும் சாதாரண மனிதர்களாக இருந்து சாதனை மனிதர்களாக மாறியவர்கள் தான். இவங்களால மட்டும் எப்படி அது சாத்தியம் ஆச்சு..? நம்மால் அது முடியாதா..?

எல்லாருக்கும் ஒரே மாதிரியான மூளை தான் கடவுள் கொடுத்திருக்காரு. ஒவ்வொருத்தரும் அதை பயன்படுத்தற விதத்துல தான் அவங்களோட வல்லமை வெளிப்படுது.

நம் செயல்கள் நுணுக்கமாக பார்ப்பதற்கு பதிலா மேலோட்டமாகவும், கவனிப்பதற்கு பதிலா கணிப்பதாகவும், எளிமைக்கு பதிலா சிக்கலாகவும் இருப்பதே நாம் பெரும்பாலும் வல்லவராவதற்கான வாய்ப்புகளை கோட்டை விடுவதற்கான காரணங்கள் எனவும், நம் அறிவு எறும்பின் தோலை உரிக்கும் அளவிற்கு கூராக இருப்பதே வல்லவராகும் தகுதி எனவும் இந்தப் புத்தகம் விளக்குகிறது.

கற்றலின் நான்கு நிலைகள்..

Unconscious Incompetence

Conscious Incompetence

Unconscious Competence

Conscious Competence

இந்தக் கருத்தைப் பதியவைப்பதே இப்புத்தகத்தின் நோக்கம். மேலும், ஒரு விஷயம் கற்றுக்கொள்ளத் தொடங்கும் போது நிகழும் மாற்றங்களையும், அதைக் கற்றுக்கொள்ளும் போது மனதில் வைக்க வேண்டிய கருத்துக்களையும் சிறு வரலாற்றுக் கதைகள் மூலமாக விளக்கியிருப்பது தேடிப் படிப்பதற்கரிய தகவல்களாகும். கருத்துத் திணிப்பாக அல்லாமல் யதார்த்தமான செயல்பாடுகளாக விளக்கப்பட்டுள்ளதே சோம. வள்ளியப்பன் அவர்களின் எழுத்துக்கான சிறப்பு. இதன்படி எல்லோரும் வல்லவரே!!

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #self help #soma. valliappan #ellorum vallavare

want to buy : https://www.flipkart.com/ellorum-vallavare-self-help/p/itmeshesuzpr9zsr

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: