உளவுத்துறை

ஒற்றாடல்

“துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து

என்செயினும் சோர்விலது ஒற்று”.

                                 -குறள் 586

ஒற்று-உளவு.

இதுக்கு சீனியாரிட்டி யாருன்னா நம்ம தமிழர்கள் தான். ஏன்னா, நம்ம சங்க இலக்கியங்களிலேயே உளவு பாக்கறது பத்தியும், உளவாளிகள் பத்தியும் எழுதப்பட்ட சாட்சிகள் இருக்கு. உளவு கண்டுபிடிச்சவங்களையே, உளவு பாக்க வந்தவங்களை கவனிக்காம விட்டதால தான் நாம அடிமையாகிட்டோம், பிரிட்டிஷ்காரன்கிட்ட. இப்போ காலம் மாறிப் போச்சு.

ஒரு வலிமையான நாட்டுக்கான specification list-ல முதலிடம் அந்த நாட்டோட உளவுத்துறைக்கே!! ராணுவத்தை விட உளவுத்துறைக்கும், உளவாளிகளுக்கும் அதிகாரமும், பணமும் கொஞ்சம் கூட கூச்சமில்லாம செலவு செய்யப்படுகிறது மற்றும் பிரதமரின் நேரடிப் பார்வையின் கீழ் செயல்படும் ஓர் அமைப்பாக உள்ளது. இதன் வேலை பிரதமருக்கு மட்டுமான சிறப்பு காலை செய்தித்தாளை தயார் செய்வதுதான்.

ஆரம்ப காலத்துல இந்த உளவுத்துறைகளை ஆரம்பிச்சதே தங்களோட நாட்டுக்கு வர பிரச்சினைகளை தடுக்கறதுக்காக தான். போகப்போக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைன்னு சொல்லி சட்டவிரோதமா அண்டை நாட்டுக்குள்ள நுழைஞ்சு வேவு பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. சட்டவிரோதமானு சொல்றாங்களேனு யோசிக்கரிங்களா..? பின்னே, உங்க தனிப்பட்ட மொபைல் போனை யாருனே தெரியாத ஒருத்தர் எடுத்து பாக்கறது சரியா..? அதே மாதிரி தான் வேற ஒரு நாட்டுக்குள்ள நுழைஞ்சு வேவு பாக்கறதும்.

ஒரு நாடுன்னு எடுத்துக்கிட்டா அநேகமா ரெண்டு உளவுத்துறைகள் இருக்கும். ஒன்னு உள் நாட்டு விவகாரங்களை கவனிக்கறதுக்கு, இன்னொன்னு வெளிநாட்டு விவகாரங்களை கவனிக்கறதுக்கு.

உளவாளிகள்..

உளவாளிகள்னு சொன்னவுடனே கோட் சூட் போட்டுகிட்டு ஜேம்ஸ் பாண்ட், இல்ல ஒட்டு தாடி வெச்சுகிட்டு மாறுவேஷம் போட்ட எம்.ஜி.ஆர் ஞாபகத்துக்கு வரலாம். ஆனா, ஒரு நாட்டுல இருந்து வேற நாட்டுக்கு உளவு பாக்கப் போறவங்களோட அடையாளம், வேலை, நோக்கம் அனைத்தையும் மாற்றி மக்களோடு மக்களாக மறைத்து வைக்கப்படுகிறார்கள். இந்த ஹீரோக்களைப் பற்றி சொந்த நாட்டு மக்களுக்கே தெரியாது. அவ்வளவு ஏன், கூட இருக்கும் சொந்த பந்தங்களுக்கே தெரியாது.

*உயிருக்கு நிர்வாகம் பொறுப்பாகாது

உளவுத்துறை பற்றிய நிறைய உண்மைகள் தமிழில் புத்தகங்களாக வெளிவந்திருக்கு. உதாரணத்துக்கு இஸ்ரேலின் மொஸாட், அமெரிக்காவின் சிஐஏ, ரஷ்யாவின் கேஜிபி, இந்தியாவின் ரா மற்றும் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ.

இந்தப் புத்தகங்களின் மூலமாக உளவுத்துறை பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் எளிதாக அறிந்துகொள்ள முடியும். இனிவரும் காலங்களில் உளவுத்துறை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் பற்றிய பதிவுகள் வர உள்ளன. வாசிக்கத் தவறாதீர்கள்!!

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #ulavu #intelligence agency #spy #ottru

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: