சாவி

கருமியான(கஞ்சமான) ஒரு இசைக்கலைஞர் இறக்கும் தருவாயில் கூறிய புதிர் வார்த்தையின் பின்னணியில் இருந்தது ஒரு ரகசியம். ரகசியமறிய உதவி கேட்டவரின் ஆவல் ஃபெலுவிற்கும் வர ரகசியத்தின் பாதையில் கதை நகருகிறது.

இசைக்கலைஞரின் வீடு அபூர்வ இசைக்கருவிகளால் நிரம்பியுள்ளது ஃபெலுவிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குழப்பத்தில் சிக்கியிருந்த கதையின் நடுவில் அபூர்வ இசைக்கருவிகளை வாங்க வந்த புதிய நபரின் தகவல்கள் ஃபெலுடாவின் உள்ளுணர்வை எழுப்பியது. சிறுவனின் தகவல் ஃபெலுவை ரகசியத்தின் முடிச்சை அவிழ்க்க தூண்டுகோலாக அமைந்தது.

கதையும் நகர புதிரும் வளர திடீர் திருப்பமாக வந்த திருடன் யார்? புத்திசாலி இசைக்கலைஞரின் வார்த்தைகளின் அர்த்தம் என்ன? புதிரின் முடிவில் இருப்பது புதையலா..? சாவியா..? உங்கள் ஆர்வத்தை கட்டவிழ்க்க தயாராகுங்கள்!! ரேயின் சாவியோடு..

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #satyajit ray #feluda # saavi

want to buy : https://www.commonfolks.in/books/d/saavi

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading