மொஸாட்

மொஸாட்..

மொஸாட் லிஅலியா பெட். அலியா பெட்னு சொன்னவுடனே ஏதோ நடிகைன்னு நினைச்சிராதிங்க. இது ஒரு உதவி அமைப்பாகத் தொடங்கி  பின்னாளில் உலகமே பார்த்து நடுங்கும், அமெரிக்காவே தொட பயப்படும் இஸ்ரேலின் ‘மொஸாட்’ என்னும் உளவு அமைப்பாக மாறியது.

இஸ்ரேல்..

ஹிட்லரிடமிருந்து தப்பித்து, எஞ்சிய யூதர்களினால் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உருவாக்கப்பட்ட தேசமே இஸ்ரேல். புதியதாக உருவாக்கப்பட்ட நாடு என்பதால் அந்நிய நாடுகளின் ஆக்கிரமிப்பு, தீவிரவாத அச்சுறுத்தல் போன்ற பல நெருக்கடிகளை சமாளித்தே வலிமையானது. இவைகளை சமாளிக்க அவர்கள் தொடுத்த ஆயுதத்தின் பெயர் மொஸாட்.

பிறகு சர்வ வல்லமை பொதிந்த நாடுகளிலேயே வலிமையான சிறு நாடாக இஸ்ரேல் வளர்ச்சியடைந்தது. எதிர்க்க முடியாததால், தோழனாக அமெரிக்கா கைகோர்த்தது, இக்காரணத்தால் எக்காரணம் கொண்டும் மற்ற நாடுகள் இஸ்ரேலின் வம்புக்கு போகவில்லை.

வரலாற்றில் ம்யூனிக் படுகொலை பழிதீர்ப்பு, ஐக்மென் வழக்கு, ஈராக் அணு உலை தகர்ப்பு, பிரான்ஸ் கப்பல் திருட்டு, மிக்21 கடத்தல் இந்த சம்பவங்களில் மொஸாட்டின் தலையீடுகள் மற்றும் செயல்பாடுகள் சாமர்த்தியமாக நிகழ்த்தப்பட்டது.

என்.சொக்கன் எழுதிய மொஸாட் புத்தகமானது விளக்கக் கட்டுரைகளாக இல்லாமல், கதை சொல்வது போல திருப்பங்களையும், சுவாரஸ்யங்களையும் பொதித்து எழுதியிருப்பது படிப்பதற்கு புதிய அனுபவமாக உள்ளது. இதில் மஞ்சள் கேக் விவகாரம் தீர்த்துவைக்கப்பட்டது, சினிமா பாணியில் உள்ளது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தும். மேலும், இஸ்ரேலின் வரலாற்றையே மொஸாட்டின் கரையிலேயே கடந்து வந்தது போன்ற அனுபவத்தை இப்புத்தக வாசிப்பு கொடுக்கிறது.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #ulavu #intelligence agency #n.sokkan #mossad

want to buy : https://www.amazon.in/Mossad-xBAE-xBCA-xBB8-xBBE/dp/8184937105?tag=googinhydr18418-21&tag=googinkenshoo-21&ascsubtag=_k_CjwKCAjw7anqBRALEiwAgvGgm94QjHl8jMqov7kWxk4bYyjo0A75bwQe9YD7DSwusXUpRtNh36LI0RoCr-EQAvD_BwE_k_&gclid=CjwKCAjw7anqBRALEiwAgvGgm94QjHl8jMqov7kWxk4bYyjo0A75bwQe9YD7DSwusXUpRtNh36LI0RoCr-EQAvD_BwE

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: