எளிய தமிழில் CSS

எக்ஸாம்ல content இருந்தா மட்டும் பத்தாது, presentation ரொம்ப முக்கியம். அப்போ தான் மார்க் நிறைய கிடைக்கும். அதுபோல நீங்க ஒரு வலைத்தளம் தொடங்கறிங்க, அதுக்கு மக்கள் கிட்ட வரவேற்பு கிடைக்கணும்னா தரமான பதிவுகளைத் தாண்டி கவர்ச்சியும் வேணும்.

இப்போ அந்த content தான் HTML, presentation தான் CSS. HTML-ங்கறது உங்க வலைத்தளத்துல இருக்க வேண்டிய தேவையான வரைமுறைகளுடன் கூடிய கருவிகளைக்(tools) கொண்டிருக்கும். இது ஒரு வலைத்தளம் நிறுவ போதுமான ஒன்று. CSS என்பது இந்த வலைத்தளத்தில் உள்ள கருவிகளையும் பதிவுகளையும் மேலும் மெருகேற்றப் பயன்படும் கணினி மொழி.

CSS-ஐத் தனியாக பயன்படுத்த முடியாது. HTML+CSS-ஆக தான் பயன்படுத்த  முடியும். HTML வரைவுகளுடன் கூடிய templates இணையத்தில் ஏராளம். இதை தனித்துவமாக மெருகேற்ற விரும்பினால் CSS கணினி மொழி பற்றி சிறிது தெரிந்துகொள்வது அவசியம்.

நீங்கள் கணினி மொழிக்கு புதியவர் என்றால் உங்கள் தனிப்பட்ட வலைதளத்தையோ, வலைப்பூவையோ கவர்ச்சியாக எளிய முறையில் மாற்ற CSS-ஐ பயிற்றுவிக்கிறது, “எளிய முறையில் CSS”.

இதை வரையறுத்து கொடுத்த இந்நூலின் ஆசிரியர் து.நித்யா, கடினத்தை கையில் எடுக்காமல் அனைவருக்கும் புரியும் வகையில் இப்புத்தகத்தை செதுக்கியுள்ளார்.

இந்தப் புத்தகம் கீழே உள்ள லிங்கில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #software #CSS #d.nithya #eliya tamilil CSS #learn CSS in tamil

download link : https://drive.google.com/file/d/1ndiSkaHxK2zkIlfPZGN9izP87vk7gH5I/view?usp=sharing

author’s link : http://freetamilebooks.com/authors/nithyaduraisamy/

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: