பூட்டிய பணப்பெட்டி

‘ஒன்று இரண்டு..

ஷூவைப் போடு..

மூன்று நான்கு..

கதவை மூடு..

ஐந்து ஆறு..

குச்சியை எடு..

ஏழு எட்டு..

கதவைத் திற..

ஒன்பது பத்து..

ஒரு பெரிய தடித்த கோழி..

பதினொன்று, பன்னிரெண்டு..

தோண்டு, துளாவு..’

————————————————————————————

ஃபெலுடாவிற்கு முதியவர் ஒருவரிடமிருந்து வந்த கடித அழைப்பை ஏற்று கல்கத்தாவிலிருந்து வரலாற்று சிறப்பு மிக்க பிளாசிப் போர் நடந்த கிராமத்திற்கு செல்கிறார். அழைப்பின் நோக்கம் புதிரின் முடிச்சை  அவிழ்ப்பதற்கான சவால். விடைக்கு பரிசாக ஃபெலுடாவிற்கு கிடைக்க இருப்பதோ கிடைப்பதற்கரிய பொருள்.

எதிர்ப்படும் பூட்டிய பணப்பெட்டி, மர்ம வார்த்தைகளை கூறும் கிளி மேலும், கவலையில் இருந்த 72 வயது எலும்புருக்கி நோயாளி. மர்மப் புதிர் அவிழ்க்கப்படுமா? பூட்டிய பணப்பெட்டி திறக்கப்படுமா? அரிய பரிசு ஃபெலுவிற்கு கிடைக்கப் பெறுமா?

இருளின் அலையில் சலனமற்று நகரும் கதையின் கடைசி பக்கங்கள், “என்னடா பொழுது விடிஞ்சிருச்சே இன்னும் எதுவும் நடக்கலையே”ன்னு பாத்தா “இந்த ஒரு வழி தான் இருக்கு” அப்படின்னு சொல்லி ஒரு புது ட்விஸ்ட் உள்ள வருது. மிரட்டும் கடைசி ஐந்து பக்கங்களைப் படிக்கத் தவறாதீர்கள்!!

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #satyajit ray #feluda #poottiya panappetti

want to buy : https://www.commonfolks.in/books/d/poottiya-panappetti

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: