கொஞ்சம் மேகம் கொஞ்சம் நிலவு!

“கான்வென்ட்டில் படிக்கும் பள்ளிக் குழந்தைகளைக் கடத்தி, அவர்களை கஷ்டப்படுத்தி, அவர்கள் படும் துன்பத்தை அணுஅணுவாக ரசிக்கும் ஒரு சைக்கோவின் கதை..”

ஷ்யாம், சாய் என்ற 6 வயது சிறுவனைத் தன்னுடைய கெஸ்ட் ஹவுஸில் அடைத்து வைத்து உணவு ஏதுமின்றி, அவனுடைய உடம்பிலிருந்து ரத்தத்தை சிரிஞ்சில் உறிஞ்சி, அவன் அழுவதைப் பொருட்படுத்தாமல் சிறுவனுடைய கண்ணீர்த் துளிகளை ருசித்து அதை ரசித்துக் கொண்டிருந்தான்.

ஷ்யாமிற்கு விபா என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சாய் என்ற சிறுவன் விபாவின் அப்பாவிற்கு சொந்தமான கான்வென்ட்டில் தான் படித்துக் கொண்டிருந்தான். இதற்கு முன் அதே கான்வென்ட்டில் படித்த ஒரு சிறுவன் ஏற்கனவே ஷ்யாமால் கடத்தப்பட்டு நான்கு நாட்களுக்கு பிறகு புத்தி பேதலிச்ச நிலையில் போலீசால் மீட்கப்பட்டான். ஷ்யாமின் நடவடிக்கையை கவனித்த இரண்டு தீவிரவாதிகள் ஷ்யாமிடம் பணம் பறிக்கத் திட்டமிட்டு அவனிடம் டீல் பேசுகிறார்கள். சிக்கலான இந்த சூழலில் அந்த கெஸ்ட் ஹவுஸில் ஒரு கொலை நடக்கிறது. இதற்கிடையில் விபாவின் பெற்றோர்கள் யார்(?) என்ற குழப்பம் ஏற்பட்டு, ஜமீன் பரம்பரையை சேர்ந்த ஒருவர் தான் விபாவின் தந்தை எனத் தெரிய வருகிறது.

ஜமீன் பரம்பரைக்கு வாரிசு இல்லாததால் விபாவை தான் கூட்டிச் செல்வதாக கூறி, அவளுக்கு திருமணம் ஏற்பாடு செய்ய முயல்கிறார். இடையில், விபா மற்றும் ஷ்யாம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரகசியத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

சைக்கோ ஷ்யாமிற்கும் விபாவிற்கும் திருமணம் நடந்ததா? சாய் காப்பாற்றப்பட்டானா? கொலையாளி யார்? தீவிரவாதிகள் போலீசிடம் பிடிபட்டனரா? ஷ்யாமின் இந்த சைக்கோ மனநிலையின் பின்னணி என்ன? என்பதை திகிலோடு சொல்லி இருக்கிறார் ராஜேஷ்குமார் அவர்கள். கதையில் அரங்கேறும் சம்பவங்கள் படபடக்க வைக்கும்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #konjam megam konjam nilavu #psycho

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=289

2 thoughts on “கொஞ்சம் மேகம் கொஞ்சம் நிலவு!

Add yours

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: