“என்னோட கிளியைத் திருடியவனை உங்களால கண்டுபிடித்து தர முடியுமா..?”
சவால் விடும் ஆறு வயது சிறுவனுக்காக கேஸை அணுகும் ஃபெலுடாவிற்கு பழம்பெரும் பொக்கிஷங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. கிளியின் கூண்டில் இருந்த ரத்தம். போன இடத்தில் நடக்கும் கொலை!! கொலையானது சிறுவனின் தாத்தா. கொலையாளி யார்?
கொலையாளியை பிடிக்க விரையும் ஃபெலுடா, கண் முன்னே மாயமான குற்றவாளி. சிக்கல்கள் அடுக்கி கொண்டே போக, காணாமல் போன வரலாற்று சிறப்பு வாய்ந்த பொக்கிஷம். அந்த பொக்கிஷம் நெப்போலியனின் கடிதம்.
கிளியைக் கண்டுபிக்க ஃபெலுடா காட்டும் ஆர்வமே, அந்தக் கொலையையும் தீர்க்க உதவுகிறது.
கொலையின் நோக்கம் என்ன? கொலைக்கான காரணம் பழிதீர்ப்பதா? காணாமல் போன அந்த நெப்போலியன் கடிதம் திரும்ப கிடைத்ததா? உயிருடன் இருந்த கிளி ஃபெலுடாவால் மீட்கப்பட்டதா? கிளியைத் திறந்து விட்டதற்கான காரணம் என்ன? கிளியைத் திறந்து விட்டது யார்?
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #satyajit ray #feluda #nepolean kaditham
Intersting story.nice.