எலியின் பாஸ்வேர்டு

டெக்னாலஜி நமக்கெல்லாம் ஒரு வரமா..? சாபமா..?னு மிக எளிமையா, நம்ம எல்லாருக்குமே ரொம்ப நல்லாத் தெரிஞ்ச பரம எதிரிகளான எலிக்கும், பாம்புக்கும் இடையே நடக்கற ஒரு தொழில்நுட்பப் போர் தான் இந்த எலியின் பாஸ்வேர்டு. டெக்னாலஜிய வெச்சு ஒண்ணை உருவாக்கவும் முடியும், இருக்கற ஒண்ணை அழிக்கவும் முடியும்னு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எலி, பாம்பு கதையை வெச்சு நகைச்சுவையுடன் கற்பனையும் கலந்து ஓட்டியிருக்கிறார்.

பாம்புகளால அழிஞ்சிட்டு வர தன்னோட இனத்தைக் காப்பாத்தறதுக்காக எலிங்க முயல் கிட்ட உதவி கேட்டு போச்சு. அதுக்கு முயல் சொன்னது, படிப்பறிவு இல்லாததால தான் உங்க இனத்தை உங்களால காப்பாத்த முடியல.

முயலோட ஐடியாவின் படி எலிகள், தன்னோட கூட்டத்துல புத்திசாலிப் பயலான ‘டோம்’ங்கற எலியை இங்கிலாந்துக்கு படிக்க அனுப்பறாங்க. நாலு வருஷம் கம்ப்யூட்டர் சயன்ஸ் இன்ஜினியரிங் படிப்பு முடிஞ்சு டோம் திரும்பி வந்து, தன்னோட கம்ப்யூட்டர் அறிவை முடுக்கி எலிகளோட வலைக்கு ஒரு செக்யூரிட்டி டோர் ஒண்ணை ரெடி பண்ணுச்சு. அந்த டோருக்கு ஒரு பாஸ்வேர்டு செட் பண்ணுது. அதனால பாம்புகளால எலியை வேட்டையாட முடியல.

“பாம்புக் காது”ன்னு நம்ம ஊர்ல சொல்வாங்களே, எப்படியோ சீக்ரெட் வால்ட்டை உடைச்சா தான் எலிகளை நெருங்க முடியும்னு பாம்புக் கூட்டத் தலைவன் நாகா காதுக்கு வருது. சூட்சுமத்தைத் தெரிஞ்சுகிட்ட தலைவன் ‘ராக்’னு ஒரு பாம்பை செலக்ட் பண்ணி வெளிநாட்டுக்கு படிக்க அனுப்பறான். படிச்சு முடிச்சு பழி வாங்கத் திரும்பி வந்த ராக், டோம் எலியோட பாஸ்வோர்டை பிரேக் பண்ணி கூட்டத்தோட வலைக்குள்ள புகுந்திடுறான். எலிகளோட வயித்துல புளியைக் கரைக்க, ராக் டோமை முறைக்க, டோம் கிட்ட இருந்தது ஒரு திட்டம்(?)

எலிகள் பாம்புகளிடமிருந்து தப்பித்ததா? டோம் எலிகளைக் காப்பாற்ற என்ன திட்டம் வைத்திருந்தது? ராக்கின் டெக்னாலஜி அறிவு ஜெயித்ததா? டோமின் புத்திசாலித்தனம் ஜெயித்ததா?

இந்தக் கதை குழந்தைகளுக்கு சொல்லவேண்டிய ஃபர்ஸ்ட் கிளாஸ் பெட் டைம் ஸ்டோரியாகக் கூட இடம்பெறலாம்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #s.ramakrishnan #eliyin password #kids story

want to buy : https://www.panuval.com/eliyin-password-10004547

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading