முத்துப்பட்டன் கதை

மனித உணர்வையும், உறவுகளையும் மதித்து சாதி வெறியை எதிர்த்து வெற்றி பெற்ற வீரன் ஒருவனின் வரலாறே இந்த முத்துப்பட்டன் கதை. ஆதி காலம் தொடங்கி இந்தக் காலம் வரை பிறப்பால் மனிதர்கள் என்பதை மறந்து, சாதியால் வேறுபட்டு நிற்கின்றார்கள் மனிதர்கள்.

நெல்லை மாவட்டத்தில் இன்றும் இக்கதையை வில்லுப்பாட்டாகப் பாடி வருகின்றனர்.

மேல்சாதிக் குடும்பத்தில் எட்டவதாகப் பிறந்தவன் முத்துப்பட்டன். பொய்மைக்கு எதிரானவன், தீமைக்கு புறம்பானவன். காட்டில் ஒரு நாள் தாகம் தீர நீர் அருந்திக் கொண்டிருந்தவனின் பார்வையில் பட்டனர் இரு  பெண்கள். அவர்களை மறித்த பட்டன், தன்னை மணந்து கொள்ளும் படி கேட்க, அவர்களோ அவனைக் கண்டு பயந்து ஓடி, தந்தையிடம் விவரம் சொல்லி அவனிடம் தந்தையை அழைத்து சென்றனர்.

நாங்களெல்லாம் கீழ் சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை எடுத்து சொல்லியும் பட்டன் மணமுடிக்க விரும்பியதை அறிந்த தந்தை, குடுமியையும், பூணூலையும் களைந்து விட்டு நாற்பது நாள் தான்  செய்யும் செருப்பு தைக்கும் தொழிலை செய்தால் தான் மணமுடித்து தருவதாக பட்டனிடம் கூற(?)

பட்டன் அவர்களின் குலத் தொழிலை செய்தாரா? பட்டன் அப்பெண்களை மணந்தாரா? சாதியைக் காரணம் காட்டி பட்டனுக்கு நேர்ந்தது என்ன? சாதி அடையாளத்தைக் களைந்த நாயகன் பட்டனின் வீரம், உண்மை, தெளிவு ஆகியவை பண்டைய வாழ்க்கை முறையோடு வெகுவாக வாசகர்களைக் கவரும் வகையில் அமைந்திருக்கும்.

UPSC மெயின்ஸ் தேர்வில் தமிழை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் நா.வனமாமலை அவர்கள் எழுதிய நூல் முத்துப்பட்டன் கதை.

இந்தப் புத்தகத்தைப் பதிவிறக்கம் செய்து படிக்க, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

download link : http://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZl3kZty#book1/

#one minute one book #tamil #book #review #upsc mains #tamil literature #na.vanamamalai #muthupattan kadhai

2 thoughts on “முத்துப்பட்டன் கதை

Add yours

 1. இனிய பதிவுகளுக்கு நன்றி.

  பதிவில் நூலின் அட்டைப்படத்தையும் சேருங்கள்.

  On Thu, 15 Aug, 2019, 9:57 PM One minute One book, wrote:

  > oneminuteonebook posted: ” மனித உணர்வையும், உறவுகளையும் மதித்து சாதி
  > வெறியை எதிர்த்து வெற்றி பெற்ற வீரன் ஒருவனின் வரலாறே இந்த முத்துப்பட்டன்
  > கதை. ஆதி காலம் தொடங்கி இந்தக் காலம் வரை பிறப்பால் மனிதர்கள் என்பதை மறந்து,
  > சாதியால் வேறுபட்டு நிற்கின்றார்கள் மனிதர்கள். நெல்லை மாவட்டத்த”
  >

  1. எனது புத்தகத்தில் அட்டைப்படம் இல்லை. இணையத்திலும் தெளிவான அட்டைப்படம் கிடைக்கவில்லை. ஆகையால், நானே தயார் செய்தது தான் அந்த அட்டைப்படம்.

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: