யாருக்கும் வெட்கமில்லை

‘சோ’ இந்தப் பெயர் பலருக்குப் பரிச்சயமானது. இவர் பேனா புரட்சியையோ, பகுத்தறிவையோ, நம்பிக்கையையோ சார்ந்து எழுதவில்லை. இவர் எடுத்திருப்பது உண்மைகளையே. அதோட பிம்பங்கள்ள ஒண்ணுதான் “யாருக்கும் வெட்கமில்லை”. இதப் பாத்ததும் பலருக்கு பலவித எண்ணங்கள் அல்லது ஒரு நிமிஷம் உங்கள நிறுத்தி கூட இருக்கலாம். அதுதான் உண்மையோட மேஜிக்.

“உண்மை பேசும் தைரியம் இந்த சோ ராமசாமிக்கு அதிகம்” என அவருடைய முன்னுரை எழுத்துக்களை வெச்சே நிரூபிச்சிருப்பார்.

இக்கதை எளிமையான குடும்ப சூழலில் தொடங்கி பெண்ணியத்தையும், சமூகப் பைத்தியத்தையும் பற்றிய பெரும் கேள்விகளையும் சிந்தனைகளையும் துளிர் விடச் செய்திருக்கும்.

‘வேணு’ங்கற இளம் வழக்கறிஞரின் முதல் கேஸான ‘பிரமீளா’வைத் தனது நவநாகரிகக் குடும்பத்தில் பொய்களைச் சொல்லி அடைக்கலம் புகுத்த ஆரம்பிக்கும் கதை, சினிமாக்களுக்கே உரிய திருப்பங்களோடு இறுதிக் கட்டம் நோக்கி செல்கிறது.

கட்டுரை, நாவல் போன்றவற்றை வாசித்த உங்களுக்கு நாடக நடை புதியதாக இருக்கலாம். உரையாடல்கள் மூலம் கதையைப் புரிந்து கொள்வது புதிய அனுபவத்தைத் தரும். நகைச்சுவைக் காரணியாக ராவுத்தர் கதாப்பாத்திரம் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

UPSC மெயின்ஸ் தேர்வில் தமிழை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ள பாடப்பகுதி.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #literature #play #script #upsc #cho #yaarukkum vetkamillai

want to buy : https://www.udumalai.com/yarukkum-vetkamillai.htm

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: