கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்

கிருஸ்துமஸ் விடுமுறையை எதிர்நோக்கியிருந்த ஃபெலுடாவிற்கு அழைப்புக் கடிதம் வந்தது கைலாஷ் சௌதுரியிடமிருந்து. ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த கைலாஷ் சௌதுரி ஒரு வக்கீல், வேட்டைக்காரரும் கூட. சில நாட்களாக இரவில் தூக்கமின்றி, கையில் துப்பாக்கியுடன், எப்போதும் ஒரு வித கவலையில் ஆழ்ந்திருந்தார்.

அவரது கவலைக்கு காரணம், அவரிடமிருந்த கண்களைக் கூசும் ஒளி வீசக்கூடிய நீலமேக வண்ண இரத்தினக்கல். அதை ஒப்படைக்குமாறு ஒரு மிரட்டல் கடிதமும், தொலைபேசி அழைப்பும் வர கைலாஷ் சௌதுரி கதிகலங்கிப் போகிறார். இந்நிலையில் ஃபெலுடாவிடம் உதவி கேட்கவே சூசகமாக அழைப்பு விடுத்திருந்தார். கைலாஷ் சௌதுரியின் மருமகன் ஃபெலுடாவிடம் தன் மாமாவின் விசித்திரமான நடவடிக்கைகளைப் பற்றி சொல்கிறான்.

“அன்றொரு நாள்” என கதைக்குள் கதையாக நீலமேக ரத்தினக்கல் கிடைத்த விவரத்தை சௌதுரி சொல்லி முடிக்கிறார். துப்பறிய தொடங்கியவுடன் ஃபெலுடாவையும் தொப்ஷேவையும் கொல்ல வந்த கார்.

கைலாஷின் விசித்திர நடவடிக்கை என்ன? ரத்தினக்கல்லின் பின்னணி என்ன? ஃபெலுடாவை வரவழைத்ததன் உண்மைக் காரணம் என்ன? மிரட்டல் பேர்வழி யார்? யாரும் எதிர்பார்க்காத இறுதிக் கட்ட திருப்பத்துடன் உங்களுடைய வாசிப்புக்கு காத்திருக்கிறது, “கைலாஷ் சௌதுரியின் ரத்தினக்கல்”.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #satyajit ray #feluda #kailash choudhuriyin rathinakkal

want to buy : https://www.amazon.in/Kailash-Choudhuriyin-Rathinakkal-Satyajit-Ray/dp/9382826750/ref=sr_1_9?qid=1565957069&refinements=p_lbr_books_authors_browse-bin%3ASatyajit+Ray&s=books&sr=1-9

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: