ஒரு மனுஷனுக்கு எதிர்காலத்துல நடக்கப் போறதைக் கணிக்க ஜாதகம் இருக்கற மாதிரி, ஒரு மனுஷனுக்கு எதிர்காலத்துல வரப் போற நோய், நோய்க்கான காரணம், சரி செய்யறதுக்கான சாத்தியத்தையும் கொண்டிருக்கிறது தான் மரபணு ஜாதகம். DNA-ங்கற ஓலைச்சுவடில உங்க அனைத்து சிறப்புகளுக்கும், குறைபாடுகளுக்கும் விடை இருக்கு.
மரபணு அப்படின்னா என்னங்க..?
ஒரு சந்ததியில இருக்கற பரம்பரை குணங்களை இன்னொரு சந்ததிக்கு கடத்தறது. இது குணங்களை மட்டுமல்லாமல் நோய்களையும் கடத்துது. அதோட விளைவு தான் மரபணு சம்பத்தப்பட்ட நோய்கள். ஒருத்தர் பேமிலி டாக்டரைப் போய் பாக்கறாரு. அவருக்கு சர்க்கரை நோய் இருக்குனு டாக்டர் சொன்னதும், பேஷன்ட் வாய்ப்பே இல்லைன்னு மறுக்க, நான் நல்ல உணவுப் பழக்கத்தோட என்னோட உடம்பை பெர்பெக்டா பாத்துக்கிட்டு இருக்கேன்னு சொல்லப் போக, உடனே டாக்டர் உங்க அப்பாவிற்கு சர்க்கரை நோய் இருக்கறதால உங்களுக்கும் வந்திருக்கலாம்னு சொல்றாரு. இந்த கான்செப்ட் உங்களுக்கு புரிஞ்சா மரபியல் ரொம்ப ஈசிங்க. சொந்தத்துல கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு சொல்றதுக்கு காரணமும் மரபணுல ஏற்படுற கலவரத்துனால தான்.
கருவில் இருக்கற குழந்தை ஆணா?..பெண்ணா? ஒரு குழந்தையோட உண்மையான பெற்றோர்கள் யார்? மரபணு வெச்சு குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கறாங்க? bt-கத்தரிக்காயை ஏன் எதிர்க்கறாங்க? குரோமோசோம்னா என்ன? இதுபோன்ற உங்களோட மரபியல் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலாக ஆயிஷா இரா.நடராசன் அவர்கள் எழுதியிருக்கிறார், “100/100 அறிவியல் : மரபியல்” படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #era. natarasan #100/100 ariviyal : marabiyal
Leave a Reply