வெல்டன் விவேக்

“புத்திசாலிசாலித்தனம் துரோகத்துக்கு துணை போகக் கூடாது. அதேபோல் புத்திசாலி இளைஞர்கள் தீவிரவாதத்திற்கு துணை போகக் கூடாது.”

விவேக் ஜாக்கிங் போவதற்காக தயாராகிக்கொண்டிருந்த நேரம், ஒரு அதிர்ச்சியான தகவலோடு வந்தான் விஷ்ணு, அவன் கையில் அன்றைய தின பேப்பர். பேப்பரில் மாஜி ஏர்மார்ஷல் மித்ராராய் அகால மரணமடைந்தார் என்ற செய்தி விவேக்கையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் விவேக்கிற்கு நன்கு பரிச்சயமானவர்.

துக்கம் விசாரிக்க சென்ற இருவருக்கும் காத்திருந்ததோ மேலும் ஒரு அதிர்ச்சி, முழுதாய் உயிரோடிருக்கும் மித்ராராய். ஆனால், அன்றிரவே மினி ஃப்ளைட் கம் டைனமைட்(bomb) வைத்து கொல்லப்படுகிறார் மித்ராராய்.

காரணம் காண, மினி சைலன்சர் ஃப்ளைட்டைக் கண்டுபிடித்த விஞ்ஞானியைத் தேடிப் போன இடத்தில் விவேக்கைத் தாக்கி விட்டு, தற்கொலை செய்து கொள்ளும் ஸ்வர்ணா என்றொரு பெண் என திடீர் திருப்பங்களுடனும் ஆச்சர்யங்களுடனும் கதை நகர்கிறது.

மித்ராராய் கொல்லப்பட்டதற்கான காரணம் அவரைப் பழி தீர்ப்பதா? மினி சைலன்சர் ஃப்ளைட்டைக் கண்டுபிடித்த விஞ்ஞானி என்ன ஆனார்? தற்கொலை செய்து கொண்ட பெண் யார்? குற்றவாளியை விவேக் கண்டுபிடித்தாரா? இராணுவ அதிகாரியின் கொலைக்கு அரசாங்கத்தின் பதிலடியே கதையின் உச்சகட்டம்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #welldone-vivek

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=215

One thought on “வெல்டன் விவேக்

Add yours

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: