புக் மார்க்ஸ்

‘புத்தகம்’ என்ற சொல் எப்படி வந்தது?

அந்தக் காலத்தில் காகிதம் கிடையாது. நூல்களைப் பனை ஓலையில்தான் எழுதினார்கள்.

பனையை குறிக்கும் தமிழ் சொல் ‘போந்து’ பனை ஓலையைக் குறிப்பது ‘போந்தை’. இந்தச் சொற்கள் பின்னர் ‘போத்து’ என மாறி, ’பொத்து’ எனக் குறுகின. அதில் எழுதப்பட்ட விஷயங்களைப் ‘பொத்தகம்’ என்று அழைத்தார்கள்.

தமிழில் பல சொற்கள் ஒகரம் மாறி உகரம் ஆவது வழக்கம். அதன்படி, ‘பொத்தகம்’ என்பது ‘புத்தகம்’ என்று மாறிவிட்டது.

ஆக, ‘பொத்தகம்’ என்பதுதான் சரியான பழந்தமிழ்ச் சொல். ‘புத்தகம்’ என்பது இப்போது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சொல்.

(ஆதாரம் : இரா. இளங்குமரனார் எழுதிய ‘பிழை இல்லாமல் எழுதுவோம்’ நூல்)

புக் மார்க்ஸ்..

நம்மள சிலருக்கு தகவல்களை தெரிஞ்சு வெச்சுக்க பிடிக்கும், சிலர் கொஞ்சம் அபூர்வமான விசித்திரமான தகவல்களை தெரிஞ்சுக்க ஆர்வமா இருப்பாங்க. தெரிஞ்சுக்கிட்டதை பல பேருக்கிட்ட சொல்லி பெருமைப்படறதுல ஒரு சின்ன ஆனந்தம். இந்த புத்தகத்தை பல வரலாற்றுச் சம்பவங்களின் நினைவுகளையும், தகவல்களையும், உண்மைகளையும் சுமக்க வைத்திருக்கிறார் எழுத்தாளர் என்.சொக்கன்.

இந்த புத்தகத்தில் உள்ள தகவல்கள் பல வெவ்வேறு புத்தகங்கள், நாளிதழ்கள், பிரபலங்களின் குறிப்புகளில் இருந்து 125 குறுங்கட்டுரைகளாக  சுவைபட தொகுத்து எழுதப்பட்டது. புத்தகங்கள், எழுத்தாளர்கள், தலைவர்கள், பிரபலங்களைப் பற்றிய அரிதான தகவல்களும் அவை எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற குறிப்பும் மார்க் செய்யப்பட்டிருப்பது இதன் சிறப்பு. இப்புத்தகத்தின் வழியே பல தகவல்கள், பல அறிமுகங்கள் உங்கள் வாசிப்பை மேம்படுத்தும்.

ஆசிரியர் குறிப்பு : இந்தப் புத்தகத்தை நீங்கள் எந்தப் பக்கத்திலும் பிரித்துப் படிக்கத் தொடங்கலாம், சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவம் கேரண்டி!

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #n.chokkan #book marks #short stories #information #celebrities #author #criticism

want to buy : http://www.noolulagam.com/?st=1&s=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&si=1&x=11&y=10

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: