ஒரு நதி..ஒரு பௌர்ணமி..ஒரு பெண் – Crime Novel

“கண்ணெதிரே நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்கத் தயங்கும் கோழைத்தனமே அடுத்தடுத்த தவறுகளின் ஆரம்பப் புள்ளி..”

டி.ஜி.பி. மௌரியா விவேக்கின் வீட்டிற்கு வந்த நேரம் விவேக் & விஷ்ணு இருவரும் வாக்கிங் செல்ல புறப்பட்டுக் கொண்டிருந்தனர். விஷயமில்லாமல் அவர் வீட்டிற்கு வரமாட்டார் என்பதை அறிந்திருந்த விவேக்கிடம், ப்ரீப் கேஸின் உள்ளேயிருந்து ஒரு கேஸ் ஃபைலை நீட்டினார் மௌரியா. ஃபைலின் மேல் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் இருவரையும் திகைப்படையச் செய்தது. அது,

ஒரு நதி..

ஒரு பௌர்ணமி..

ஒரு பெண்..

தலை துண்டிக்கப்பட்டு கொடூரமாய் கொலை செய்யப்பட்ட பெண்ணின் போட்டோவில் பின்னணியில் ஒரு நதியும், ஒரு முழுநிலவும்.  கொலை நடந்த காட்டிற்கு அருகில் இருந்த ஹோட்டலில் தங்கி நோட்டமிட சென்ற இடத்தில் கிடைத்தது இன்னொரு பிணம். அதே நதி, அதே பௌர்ணமி, ஆனால் வேறொரு பெண். இதுவரை ரகசியமாக நடத்திகொண்டிருந்த விசாரணையை இருவரும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தனர். மூன்றாவது கொலை நடக்கும் முன் கொலையாளியைப் பிடிக்க வேண்டிய நெருக்கடி.

கொலைக் குற்றவாளியை விவேக் கண்டுபிடித்தாரா? கொலையாளி யார்? கொலையின் பின்னணி என்ன? பௌர்ணமியன்று கொலை நடப்பதால், கொலையின் நோக்கம் நரபலியா? அடுத்தடுத்த திகிலுடன் கதைக்கு தாவுங்கள்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #oru-nadhi-oru-pournami-oru-pen

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=169

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: