பள்ளிக்கூடமே ஒரு வணிக மையமாகவும், கல்வியே வியாபாரமாகவும் மாறிப்போன இந்த காலத்துப் பையன் திவாகருக்கு ஸ்கூல் அப்படிங்கற வார்த்தையே பிடிக்காது. மற்ற உயிர்களெல்லாம் சுதந்திரமா சுத்திட்டு வாழ்க்கையை என்ஜாய் பண்ணிட்டு இருக்கும்போது, மனுசங்க மட்டும் ஏன் ஸ்கூலுக்கு போகணும்? எதுக்காக படிக்கணும்? படிக்கறதுனால என்ன கிடைக்கப் போகுது? இப்படி எல்லாருக்குமே வர்ற வழக்கமான கேள்விகள் தான் திவாகருக்கும் வரும். அதீத கற்பனையும் அற்புதமான அறிவுத்திறனும் உள்ள மாணவனான திவாகருக்கும் மனப்பாடம் பண்ணி படிக்கறதே புடிக்காது. அவன் வகுப்பில கேட்கிற எடக்கு மடக்கான கேள்விகள் ஆசிரியர்களுக்கு புடிக்காது. இதனால ஸ்கூலயும் சரி, வீட்டிலயும் சரி பயங்கரமா அடி வாங்குவான். கடைசியா படிச்சிட்டிருந்த ஸ்கூலருந்தும் அவனோட தொல்லை தாங்காம வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இதுக்கப்புறம் எந்த ஸ்கூலயும் சேர்க்கக் கூடாதுன்னு அவனோட பேரண்ட்ஸ் முடிவு பண்ணிட்டிருந்த நேரத்துல, ஒரு லெட்டர் வீட்டுக்கு வருது. ஸ்கூல்ல சேர்க்கறதுக்கான சிறப்பு அழைப்போட ஆப்பும் சேர்ந்து வருது.
அந்த ஸ்கூலோட பேரே அக்ரமா ஸ்கூல். சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் தண்டனை குடுத்து, தண்டனை குடுக்கறதுக்குன்னே ஸ்பெஷலா உருவாக்கப்பட்ட ஸ்கூல் அது. பாறையைக் குடைந்து அந்த குகைக்குள்ளேயே பள்ளிக்கூடம், தங்குமிடம் என பார்ப்பவர்களுக்கு கிலியை ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு ஸ்கூலை கட்டியிருப்பாங்க. அவங்க குடுக்கற தண்டனைகளைத் தாங்க முடியாத திவாகரும், அவனோட பிரெண்ட்ஸும் திட்டம் போட்டு எப்படி அந்த ஸ்கூல்ல இருந்து தப்பிச்சு, மந்திர சக்தி மூலமா நல்ல ஸ்கூலுக்கு போறாங்க, அதுதான் மீதி கதை. கதையின் ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் ஸ்கூல் சுத்தியே நகரும் கதை, இடையில் நிர்மயா என்னும் மனிதரின் மாய சக்தியினால் மாணவர்கள் மீன்களாக மாறும் இடத்திலிருந்து கதை ஒரு சுவாரஸ்யமான பயணத்தை ஆரம்பிக்கும். கற்றலின் ஆழமான புரிதலை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அற்புதமாக வெளிப்படுத்தி இருப்பார்.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #kids story #fiction #s.ramakrishnan #sirikkum vagupparai
Leave a Reply