திருப்பாவை

வைணவர்கள் போற்றும் பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள். அவர் பாடிய திருப்பாவை, 30 பாடல்களைக் கொண்டது. மார்கழி மாதம் பௌர்ணமியில் துவங்கி, 30 நாட்கள் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு இருந்து, மாதவனை வேண்டிப் பாடுவதே திருப்பாவை. பாவை நோன்புக்கான வழிமுறைகள் எளிமையானவை மற்றும் எல்லாப் பெண்களும் கடைபிடிக்கக் கூடியவை.

கன்னிப் பெண்கள் பொழுது விடியுமுன்பே எழுந்து, பிற பெண்களையும் துயில் எழுப்பிக்கொண்டு ஆற்றில் நீராடி மாதவனைத் துதித்து வழிபடுவர். நோன்புக் காலத்தில் பெண்கள் கண்ணிற்கு மையிட்டு, தலையைச் சீவி மலர்களை சூட்டுதல் போன்று தங்களை அழகூட்டுவதைத் தவிர்த்து தர்மம் முதலிய அறச் செயல்களில் ஈடுபட்டு நெய், பால் முதலிய உணவுப் பொருட்களைத் தவிர்த்து மாதவனை வழிபடுவதே நோன்பின் சிறப்பு. இவ்வாறு செய்து வந்தால் மாதம் மும்மாரி பெய்யும், வயல்களில் நெற்பயிர் ஓங்கி வளரும், பசுக்கள் நிறைய பால் கொடுக்கும் என்பது மரபு.

திருப்பாவை உலகெங்கும் புகழ்பெற்று விளங்குவதற்கு அடையாளமாய்,  தாய்லாந்தில் மன்னருக்கு முடிசூட்டும்போது திருப்பாவை பாடப்படுகிறது. அனைத்து பெருமாள் கோயில்களிலும் மார்கழி மாதம் மட்டும் சுப்ரபாதத்திற்கு பதிலாக திருப்பாவை பாடப்படுகிறது. தற்பொழுதும் இப்பாடல்கள் பாவை நோன்புக் காலத்தில் பாடப்பட்டு வருகின்றன.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #alvars #andal #thiruppavai

download link : https://drive.google.com/open?id=1cK6Ae1LctmxXVjmgGWTBnv6wxPd_n19e

source download : https://freetamilebooks.com/ebooks/thiruppavai/

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: