தங்கக் கோட்டை

சுகிர்தாரின் மகன் முகுலிற்கு முன்ஜென்ம நினைவுகள் திரும்பிய அதிசயத் தகவல் செய்தித்தாளில் படுஜோராக கிளம்ப, ஒரே நாளில் பேமஸ் ஆனான் முகுல். அவனுடைய முன்ஜென்மத்தில் தங்கக் கோட்டைக்கு அருகிலிருந்த அவன் வீட்டிற்கு கீழே ஒரு புதையல் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. தங்கக் கோட்டையைக் காண ஆவலுடன் இருந்த முகுலை ஒரு புகழ்பெற்ற ஆழ்மன உளவியலாளருடன் ஜோத்பூர் அனுப்பி வைக்கிறார் சுகிர். புதையலை எடுக்க முயலும் ஒரு கும்பல் அவன் சாயலில் இருந்த நீலுவைத் தவறுதலாகக் கடத்துகிறது. அந்த கும்பலால் முகுலுக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று பயந்த சுகிர் பெலுடாவை தொடர்பு கொள்கிறார்.

பாதுகாப்புக்காக உடன் செல்லும் ஃபெலுடாவுடன் முதல் முதலாக இணைகிறார், ஜடாயு. ஹோட்டலில் தங்கியிருந்த ஃபெலுவிற்கு வரும் மிரட்டல் கடிதம். சரியான இடத்தைச் சென்றடைவதற்கு முன் ஃபெலுடாவிற்கு ஏற்படும் இடர்ப்பாடுகள். இதற்கிடையில் பயணத் தொடக்கத்திலிருந்தே போர்வைவையைப் போர்த்திக் கொண்டு பின்தொடரும் ஒரு மர்ம நபரை ஃபெலுடா கவனிக்கிறார்.

நீலுவைக் கடத்திய கும்பலை ஃபெலு கண்டுபிடித்தாரா? தங்கக் கோட்டையை முகுல் சென்றடைந்தானா? ஃபெலுடாவை மிரட்டும் நபர் யார்? புதையல் கிடைத்ததா? மர்ம நபர் யார்? விடையைத் தெரிந்துகொள்ள உங்கள் கைகளில் தவழட்டும் தங்கக் கோட்டை.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #satyajit ray #feluda #thanga kottai

want to buy : https://www.amazon.in/Thangak-Koattai-Satyajit-Ray/dp/9382826785/ref=sr_1_7?qid=1566552671&refinements=p_lbr_books_authors_browse-bin%3ASatyajit+Ray&s=books&sr=1-7

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: