சந்திரனுக்கு முதல் முதலில் மனிதர்களை அனுப்ப இந்தியா திட்டமிடுகிறது. அந்தத் திட்டத்தின் ஆரம்பம் தான் ‘யுரேகா யுரேகா’ என்னும் அமைப்பு. இந்தியாவிலுள்ள அனைத்துப் பள்ளிகளிலிருந்தும் மாணவ, மாணவிகளுக்குப் போட்டி நடத்தி, இறுதிச் சுற்றில் வெற்றி பெரும் அணியை சந்திரனுக்கு அனுப்பத் திட்டமிடுகிறார்கள். இதில் நடக்கும் அனைத்துச் சுற்றுகளுமே சவால் நிறைந்ததாகவும், தீர்க்கக் கடினமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். அறிவியல் அறிவில் தேர்ந்தவர்கள் மட்டுமே இந்தச் சுற்றுகளில் சவால்களைத் தீர்க்க முடியுமளவுக்கு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்தப் போட்டியின் அரை இறுதி வரை வந்துவிட்ட வித்தியாசமான அணியைப் பற்றியே அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். அந்த அணியில் இருந்த ஒரு பார்வையற்ற சிறுவன் (கலீல்), காது கேளாத ஒரு சிறுவன் (எடி), வாய் பேச வராத ஒரு சிறுவன் (ஹாக்) மூவரும் பங்கு கொண்டு இதோ அரை இறுதி வரை ஜெயித்து வந்துவிட்டனர். இதற்கிடையே போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் சிலர் அந்தப் போட்டியிலிருந்து காணாமல் போய்க் கொண்டிருந்தனர். அந்த மாணவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதிப் போட்டிக்கு முன் கலீலும் காணாமல் போகிறான். எடியும், ஹாக்கும் நண்பன் காணாமல் போன சோகத்தில் மூழ்கியிருக்க, ஆயிரக்கணக்கான பார்வையற்ற நண்பர்களின் உதவியோடு கலீலும் மற்ற மாணவர்களும் தப்பி வருவதே மீதிக் கதை.
பல அறிவியல் கண்டுபிடிப்புகளை மாணவர்களின் மனத்தில் புகுத்தும் வண்ணம் சிறுவர்களுக்கு உரிய பாணியில் இந்தப் புத்தகம் வெளிவந்திருப்பது பெருமைக்குரியது. தமிழில் முதன் முதலில் பிரைல் மொழியில் வெளிவந்துள்ள முதல் சிறுவர் நாவல். பார்வையற்ற மாணவர்களும் அறிவியல் பாதையில் பயணிக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்தோடு எழுதப்பட்ட நாவல் இது.
இரா.நடராசன் அவர்கள் பதிவிலிருந்து..
பிரைல் மொழி – பூஜ்யமாம் ஆண்டு என்ன சிறப்பு?
பிரைலில் ஒரு புத்தகத்தை கொண்டு வருவது அவ்வளவு சுலபமல்ல. சாதாரண நூலில் 20 பக்கம் வருகிறது என்றால் பிரைலில் அது 60 பக்கம் வரும். அதாவது மூன்று மடங்காக வரும். பூஜ்யமாம் ஆண்டு நூலின் பிரைல் பதிப்பு பல புதிய உத்திகளை அடிப்படையாகக் கொண்டது.
– முதன்முறையாக பக்கதின் இரு புறமும் அச்சாக்கப்பட்டுள்ளது.
– அமெரிக்காவின் கணினி தொழில் நுட்பம் கொண்டு – தானியங்கி அச்சாக்கம் பெற்ற புத்தகம் இது.
– எளிதில் கையாளத் தக்க எடை மிகவும் குறைந்த காகிதத்தில் அச்சாகியுள்ளது.
‘பூஜ்யமாம் ஆண்டு’ நூல்தான் பார்வையற்றோரின் பாடப்புத்தகத்திற்கு வெளியே முழுவதும் பிரைலிலேயே அச்சான முதல் தமிழ் நாவல் ஆகும். அதுமட்டுமல்ல இது பிரைல் மொழி வாசிப்பை பிரைல் கண்டு படித்து 200 வருடங்கள் ஆனதை (1808 – 2008) கொண்டாடும் வகையில் தமிழில் சத்தமின்றி சந்தடியின்றி நடந்துள்ள அரிய முயற்சி.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #era.natarasan #boojjiyamam aandu #kids story #science #braille #language
want to buy : https://www.udumalai.com/pojiyamam-aandu.htm
Drop your Thoughts