கையளவு களஞ்சியம்

‘சுட்டிவிகடன்’ வருடந்தோறும் ‘க்விஸ் விஸ்’ நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. அதில் கலந்துகொள்ளும் மாணவர்கள், பொது அறிவில் சிறந்து விளங்க வேண்டும். சரித்திரம் தெரிந்து செயல்பட்டால்தான் சரித்திரம் படைக்கமுடியும் என்பதற்கேற்ப, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்காக, சுட்டி விகடனில் இணைப்பாக வெளிவந்த தகவல் புத்தகங்களைத் தொகுத்து ‘கையளவு களஞ்சியம்’ என்ற தலைப்பில் ஒரே புத்தகமாக வெளிவந்துள்ளது.

சிந்துசமவெளி நாகரிகத்தில் தொடங்கி நவீன கால இந்திய வரலாறு வரை வருடம் வாரியாகத் தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு தொடங்கப்பட்டது முதல் உலக அரசியலமைப்பு வரை அலசி ஆராய்ந்துள்ளது. சங்ககால இலக்கியத்திலிருந்து பக்தி இலக்கியம் வரை தொகுத்து எழுதப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு துறையிலும் பண்டைய காலத்திலிருந்து நவீன காலம் வரையுள்ள தகவல்களைத் தொகுத்து ஒரு வரியில் எழுதியுள்ளார், டாக்டர் சங்கர சரவணன்.

பள்ளி மாணவர்கள் விநாடி வினாவில் பங்கேற்பதற்கும், இளைஞர்கள் போட்டித் தேர்வுக்குத் தயாராவதற்கும் உகந்த நூல். ஒரு வரியில் உலகைச் சுற்றிக் காண்பிக்கும் இந்நூல் அனைவர் வீட்டிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய நூல்களில் ஒன்று.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #dr.sankara saravanan #kaiyalavu kalanchiyam #one line #information #competitive exams #tnpsc #upsc

want to buy : http://www.noolulagam.com/tamil-book/167/kayalavu-kalanjiyam-book-type-siruvargalukkaga-by-dr-sankara-saravanan/

2 thoughts on “கையளவு களஞ்சியம்

Add yours

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: