வயசென்ன?
1) எப்பவும் பள்ளிக்கு சீக்கிரமா வர்ற மாலு அன்னிக்கு லேட்டா வந்தாள். “ஏன் லேட்டா வந்தே?”னு ஃப்ரண்ட்ஸ் கேட்டதற்கு, “தம்பி அழுதுகொண்டு இருந்தான். அம்மா வர்றவரை அவனை சமாளிச்சுட்டு வர லேட்டாயிடுச்சு” என்றாள். ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் “உனக்கு தம்பி இருக்கிறதைச் சொல்லவே இல்லையே…என்ன வயசு உன் தம்பிக்கு?” என்றனர்.
“என் தம்பியின் வயசால் என் வயசைப் பெருக்கினாலும் வகுத்தாலும் ஒரே விடைதான் வரும். என் தம்பி வயசைக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்” என்றாள்!
கண்டுபிடிச்சிட்டீங்களா?
2) இதுவும் அதுபோன்ற கணக்குதான். குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு அம்மா டாக்டர்கிட்ட குழந்தையைக் கூட்டிக்கிட்டுப் போனாங்க.
டாக்டர் அவரிடம் “குழந்தைக்கு என்ன வயசு?” என்றார். அதற்கு “கல்யாணமாகி ஆறு வருஷமாகுது”ன்னார். டாக்டருக்கு ஒண்ணுமே புரியல. “நான் அதைக் கேட்கலை. குழந்தைக்கு என்ன வயசு?”ன்னார்.
அம்மா “என் வீட்டுக்காரர் என்னைவிட ஆறு வயசு மூத்தவர்” அப்படீன்னாங்க.
அம்மாவுக்கு காது கேட்காதுன்னு நினைச்ச டாக்டர் கொஞ்சம் சத்தமா கேட்டார்.
“என் வீட்டுக்காரர் வயது என் குழந்தை வயசைப் போல பத்து மடங்கு” அப்படீன்னாங்க.
“சரி! குழந்தை பிறந்த வருஷம் என்ன?”ன்னு பரிதாபமா கேட்டார் டாக்டர்.
அதற்கு அவங்க “இப்போ என் வயசும், என் வீட்டுக்காரர் வயசும் 4:5 விகிதத்தில் இருக்கு” என்றார்.
புத்திசாலி நர்ஸ் அவங்க சொன்னதை வெச்சே வயசைக் கண்டுபிடிச்சுட்டாங்க. நீங்க எப்படி?
நேரம்…தூரம்…வேகம்!
ஒரு நகைக்கடையில் வந்து திருடன் சில நகைகளைத் திருடிக்கொண்டு மோட்டர் சைக்கிளில் ஏறித் தப்பி ஓடினான். மோட்டர் சைக்கிள் மணிக்கு 20 மைல் வேகத்தில் சென்றது. திருட்டு நடந்து 3 மணி நேரம் கழித்து போலீஸ் வந்தது. போலீஸ் நாய் மோப்பம் பிடித்துக் கொண்டே திருடன் சென்ற பாதையில் போயிற்று. மணிக்கு 9 மைல் வேகத்தில் ஓடிற்று. மூன்று மணிநேரம் கழித்து மணிக்கு 3 மைல் வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டு ஓடியது.
அப்படி என்றால் நாய் திருடனை எத்தனை மணி நேரத்தில் பிடிக்கும். அப்பொழுது திருடனும், நாயும் எத்தனை மைல் தூரம் சென்று இருப்பார்கள்? அப்பொழுது நாயின் வேகம் என்ன?
மேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #aptitude #quiz #puzzle #riddle
Answer for 1st question 1yr
what about 2nd question?
விடைகள்:
வயசென்ன-1 : தம்பியின் வயது = 1
வயசென்ன-2 : குழந்தையின் வயது = 3
நேரம்..தூரம்..வேகம்!
நாய் திருடனை 15 மணிநேரத்தில் பிடிக்கும். திருடனும் நாயும் 360 மைல் சென்றிருப்பார்கள். அப்பொழுது நாயின் வேகம் 45 மைல்.