ரிப்பீட்டு

யார் தைச்ச சட்டை? எங்க தாத்தா தைச்ச சட்டை? சட்டை தைச்சதாரு. இந்த வாக்கியத்தை வேகமாகச் சொல்லிப் பார்த்திருப்பீர்கள் இல்லையா? அந்த மாதிரி சில வாக்கியங்கள் இதோ.

  1. நம்ம வீட்டுத் தச்சர் நல்ல தச்சர், தோளூர் தச்சர் சொத்தைத் தச்சர்.
  2. கிழவன் உழுத புழுதியிலே கிண்டி எடுத்த பனையோலை, கிண்டி எடுத்த பனையோலையில் கீழே ஏழோலை மேலே ஏழோலை.
  3. புட்டு சுட்டு புட்டியிலே போட்டு புட்டைக் கொடுத்தேன். புட்டைக் கொட்டிக்கொண்டு புட்டியைத் தாடா.
  4. சோறும் சோளச்சோறு. சாறும் கீரைச் சாறு, ஓடும் புது ஓடு. கூடும் சுடு கூழு. ஊற்றிப் போட்டுட்டுக் குடி.
  5. நெட்டக் கோழி இட்ட முட்ட எட்டு முட்ட நல்ல முட்ட, குட்டக் கோழி இட்ட முட்ட எட்டு முட்ட கெட்ட முட்ட.
  6. வள்ளியும் வெள்ளியும் வெள்ளி வாங்க வெள்ளிக்கிழம வெள்ளிக் கடைக்குப் போனாங்க, வெள்ளிக்கடைக்காரன் வெளியூர் போய்ட்டானு வெளிய இருக்கவன் சொன்னதால வள்ளியும் வெள்ளியும் வெள்ளி வாங்காம வீட்டுக்கு வந்துட்டாங்க.

என்ன வீட்டில் எல்லோரும் உங்களை வித்தியாசமாப் பார்க்கிறாங்களா? ‘இட்ஸ் ஆல் இன் த கேம்’ விடுங்க. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணலாமா?

வேகமாச் சொல்லிப் பாருங்க..அடுத்த சவாலுக்குத் தயாரா இருங்க..

#one minute one book #tamil #challenge #tongue twisters

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: