யார் தைச்ச சட்டை? எங்க தாத்தா தைச்ச சட்டை? சட்டை தைச்சதாரு. இந்த வாக்கியத்தை வேகமாகச் சொல்லிப் பார்த்திருப்பீர்கள் இல்லையா? அந்த மாதிரி சில வாக்கியங்கள் இதோ.
- நம்ம வீட்டுத் தச்சர் நல்ல தச்சர், தோளூர் தச்சர் சொத்தைத் தச்சர்.
- கிழவன் உழுத புழுதியிலே கிண்டி எடுத்த பனையோலை, கிண்டி எடுத்த பனையோலையில் கீழே ஏழோலை மேலே ஏழோலை.
- புட்டு சுட்டு புட்டியிலே போட்டு புட்டைக் கொடுத்தேன். புட்டைக் கொட்டிக்கொண்டு புட்டியைத் தாடா.
- சோறும் சோளச்சோறு. சாறும் கீரைச் சாறு, ஓடும் புது ஓடு. கூடும் சுடு கூழு. ஊற்றிப் போட்டுட்டுக் குடி.
- நெட்டக் கோழி இட்ட முட்ட எட்டு முட்ட நல்ல முட்ட, குட்டக் கோழி இட்ட முட்ட எட்டு முட்ட கெட்ட முட்ட.
- வள்ளியும் வெள்ளியும் வெள்ளி வாங்க வெள்ளிக்கிழம வெள்ளிக் கடைக்குப் போனாங்க, வெள்ளிக்கடைக்காரன் வெளியூர் போய்ட்டானு வெளிய இருக்கவன் சொன்னதால வள்ளியும் வெள்ளியும் வெள்ளி வாங்காம வீட்டுக்கு வந்துட்டாங்க.
என்ன வீட்டில் எல்லோரும் உங்களை வித்தியாசமாப் பார்க்கிறாங்களா? ‘இட்ஸ் ஆல் இன் த கேம்’ விடுங்க. இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணலாமா?
வேகமாச் சொல்லிப் பாருங்க..அடுத்த சவாலுக்குத் தயாரா இருங்க..
#one minute one book #tamil #challenge #tongue twisters
Leave a Reply