வங்கப்புலி மர்மம்

கிழவனின் பொந்து

தொடர வேண்டிய நடை

மக்களின் மரம்

பத்தில் பாதி

அதிலும் பாதி

நூறு

உயரும் சூரியன்

காரியம் முடிந்தால்

தெரியவில்லையா உனக்கு?

கைகளின் நடுவே

அதற்கும் கீழே நிற்பது எதுவோ

அது உனக்கேதான்!

————————————————————

புகழ்பெற்ற வேட்டைக்காரரான ஜமீன் மஹிதோஷ் சின்ஹாராய் தன்னுடைய குடும்ப வரலாற்றைப் புத்தகமாக எழுதத் தகவல்களை திரட்டிக்கொண்டிருந்தபோது அவருக்கு கிடைத்தது ஒரு புதிர்க் கடிதம். அந்தப் புதிரை அவிழ்க்க ஃபெலுடாவிடம் உதவி கோரினார், மஹிதோஷ் பாபு. அழைப்பை ஏற்று காடுகள் அடர்ந்த பகுதிக்குச் சென்ற ஃபெலு அங்கு ஒரு விபரீதம் நிகழப் போவதை அறிந்திருக்கவில்லை. புதிரின் முடிச்சை அவிழ்க்க முயற்சி மேற்கொண்டார் ஃபெலுடா. அதற்கு அடுத்த நாளே மஹிதோஷ் பாபுவின் செயலாளர் கொலை செய்யப்பட, கொலைக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முயலும் ஃபெலு, புதிருக்கு அருகில் இருப்பதை அறிந்திருக்கவில்லை. புதிரை அவிழ்த்து புதையலை வெளியே எடுக்கும் வேளையில் ஒரு ஆட்கொல்லிப் புலி எதிர்ப்பட ஃபெலுடாவிற்கு நேர்ந்தது என்ன? செயலாளரைக் கொன்றது யார்? கொலைக்குக் காரணம் என்ன? புதையல் யாருக்கு கிடைத்தது? இம்மர்மங்களுடனே காட்டுக்குள்ளிருந்து வெளிப்படும் வெளிச்சம், விடாது பெய்யும் மழை, புத்தி பேதலித்த சின்ஹாராயின் அண்ணனின் புதிர் மொழி இவையனைத்தும் சேர்ந்து மயிர்கூச்செறிய வைக்கும் கதை “வங்கப்புலி மர்மம்”.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #satyajit ray #feluda #vanga puli marmam

want to buy : http://www.noolulagam.com/tamil-book/29316/vanga-puli-marmam-book-type-novel/

One thought on “வங்கப்புலி மர்மம்

Add yours

  1. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய கதை

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: