கதை சொல்லும் பாடங்கள்

இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் வழியாகவும், ஒரு பிரச்சினையை ஒவ்வொருவரும் அணுகும், வெவ்வேறு விதமான கோணங்களைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் எழுத்தாளர் என்.சொக்கன்.

சிறு வயதில் அறியாமல் செய்த தவறினால் விளையும் துன்பங்களுக்கு எடுத்துக்காட்டாக அனுபமா கதாப்பாத்திரமும், மற்றவர்களைத் தன்னுடைய பேச்சுத் திறமையால் தோற்கடித்த மூதாட்டி கதாப்பாத்திரமும், தன்னுடைய கணவனின் மனைவிக்காக பரிதாபப்படும் சரளா கதாப்பாத்திரமும், சம்பாதித்த நம்பிக்கைக்குத் துரோகம் இழைத்த ரஷீத் கதாப்பாத்திரமும், மற்றவர்கள் விசயத்தில் மூக்கை நுழைத்து குளறுபடி செய்யும் ராமதுரை கதாப்பாத்திரமும், பலவீனத்தையே தன்னுடைய பலமாக மாற்றிக்கொண்ட கண்ணம்மா கதாப்பாத்திரமும், மற்றவர்களைக் காப்பி அடித்து அவர்களைப் போலவே வாழ நினைக்கும் வராகமூர்த்தி கதாப்பாத்திரமும், தான் சந்தித்த விசயங்களை மட்டுமே அடிப்படையாக வைத்து முடிவுகளை எடுக்கும் பிரபாகர் கதாப்பாத்திரமும், தங்கச் சங்கிலியைக் கால் சங்கிலியாக மாற்றிய ஒரு தாயின் கதாப்பாத்திரமும் கொண்ட பல பிரபலமான சிறுகதைகளை ரத்தினச் சுருக்கமாக எடுத்தாளப்பட்ட விதமும் எழுத்தாளருக்கு சிறப்பு சேர்க்கிறது. பல்வேறு சூழல்களில் ஏற்படும் சாதக பாதகங்களை எவ்விதமாக அணுக வேண்டுமென்பதை உருவாக்கப்பட்ட கதாப்பாத்திரங்களின் செயல்களினை ஆராய்வதன் மூலம் கற்பிக்கிறார் என்.சொக்கன்.

தமிழில் சிறந்த, புகழ்பெற்ற, குறிப்பிட்ட சில கதைகள் இந்தப் புத்தகத்தில் சுருக்கி வரையப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு கண்டிப்பாக அந்த முழு கதையையும் படிக்க ஆவல் ஏற்படும் என்பதில் சந்தேகமேயில்லை.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #n.chokkan #kadhai sollum paadangal #sirukadhai #short stories

want to buy : http://www.pustaka.co.in/home/ebook/tamil/kathai-sollum-paadangal

2 thoughts on “கதை சொல்லும் பாடங்கள்

Add yours

 1. உங்கள் அன்பான விமர்சனத்துக்கு மிக்க நன்றி.

  இயன்றால், இந்த விமர்சனத்தை அமேசானில் Copy, Paste செய்யுங்கள். இந்நூலை வாங்கலாமா என்று எண்ணும் பிறருக்கு அது உதவும்.

  விமர்சனம் எழுதுவதற்கான நேரடி இணைப்பு இங்கு உள்ளது: https://amzn.to/31CxwQE

  Liked by 1 person

  1. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி. உங்கள் சிறப்பான எழுத்துப் பணிக்காக நிச்சயம் செய்கிறோம். நன்றி.

   Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: