விவாதம்

பேச்சு ஒரு அடிப்படை உரிமை நம்ம சமூகத்துல. ‘வாயுள்ள புள்ளை பொழைச்சுக்கும்’னு சொல்றதும் இவங்கதான், ‘வாயில்லேன்னா உன்ன நாய் தூக்கிட்டுப் போயிரும்’னு சொல்றதும் இவங்கதான், ‘வாயால கேட்டவன்டா நீ’ அப்படின்னு சொல்றதும் இந்த சமூகம் தான். இந்த மாதிரி பல வசைபாடல்களுக்கு மேடை அமைச்சு தருவது நம்ம பங்கேற்கும் ஏதாவது ஒரு விவாதம் தான்.

விவாதம்னா..?

‘நடுவர் அவர்களே’ன்னு பேசற பட்டிமன்றங்கள், ‘கணம் கோர்ட்டார் அவர்களே’ன்னு முழங்கற நீதிமன்றங்கள், ‘நீயா? நானா?’னு போட்டி போட்டு பேசற நிகழ்ச்சிகள் உதாரணமா சொல்லத் தோணலாம் உங்களுக்கு. ஆனா உண்மையான விளக்கம் உங்கள்ள யாராலாவது குடுக்க முடியுமா? இதைப் பத்தி வெ.இறையன்பு அவர்கள் என்ன சொல்றார்னு பார்ப்போம்.

புத்தகத்திலிருந்து..

“அடுத்தவர்களைக் காயப்படுத்தி நாம் வெற்றி பெற வேண்டுமென நிகழ்த்தப்பெறுவது போர். யாரையும் காயப்படுத்தாமல் உண்மையை உணர்வதற்காக நடத்தப்படுவதே விவாதம். விவாதத்தின் முடிவு இருதரப்பினரும் கை நிறைய கருத்துக்களைப் புதிதாக எடுத்துச் செல்ல வேண்டும்.”

இது கொஞ்சம் வித்தியாசமான கண்ணோட்டமா இருக்கில்லையா? விவாதம் வாதத்தைத் தாக்குவதற்கு பதிலாக வாதியைத் தாக்குவதையே நம்மில் பலர் கண்டிருப்பதும் கற்றுக்கொண்டதும். புதிய சிந்தனை, புதிய கண்ணோட்டம், புதிய நட்பு, புதிய அணுகுமுறை போன்ற பல புதிய விசயங்களைத் தரக்கூடிய ஆரோக்கியமான விவாதம் செய்யும் வாதியாவதற்கு சிறந்த கையேடு ‘வெ.இறையன்பு’ எழுதிய ‘விவாதம்’.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #v.iraianbu #vivadham #arguement #speech #article

want to buy : https://routemybook.com/products_details/Vivadham-2693

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: