நில்..கவனி..தாக்கு

ஒரு புத்தகத்தை எடுத்தோம், படித்தோம், முடித்தோம் என்றில்லாமல் சுவைத்தோம், லயித்தோம், பெற்றோம் அறிவை என இருப்பது பயன்.

சுஜாதாவின் எழுத்தில் உருவானவன் நான். நான் யார், யாராகவோ இருக்கலாம். அவற்றில் அவரின் கதாப்பாத்திரங்களில் கதாநாயகன் இக்கதையில்..

கதைத் தலையில் பிக்கப், ட்ராப் செய்யும் பணிக்கு வந்திருக்கும் சொல்லப்படாத மத்திய அரசுத் துறையின் அதிகார ஆசாமி. முதலிலேயே என்னைப் பார்த்து கண் போன்ற கடமையை நழுவவிட்டுவிட்டேன். விட்ட இடத்திலிருந்து செல்ல சில அத்தியாயங்கள் சுவாரஸ்யமானதாக, மசாலா, ஹவாலா, சவாலா போகும் படிக்கும் உங்களுக்கும் தான்.

என் கடமை, காப்பாற்றுவது.. அரசு ரகசியங்கள், அணு ரகசியங்கள் அதை சுமக்கும் மீடியேட்டர்களை. தொலைத்தது ஒரு முறைதான் பலமுறை நிகழாது.

அடுத்தடுத்த அத்தியாயங்களில் கடிவாளங்களைத் தாண்டி சற்றே எல்லை மீறியிருப்பேன். எனக்கே சில மேட்டர்கள் ட்விஸ்டாகத்தானிருந்தது. எதுவானாலும் கடைசி அத்தியாயத்தைப் படிக்கும் போது உங்கள் மனதில் முழுதிலும் தேசப்பற்று மட்டுமே இருக்கும்.

பின் குறிப்பு: படிக்கத் தொடங்கும் முன் பதிவின் முதல் பாராகிராப்பை மனதில் நிறுத்தி படிக்கவும். இது சுஜாதாவின் எழுத்து, அப்படித்தான் படித்தாக வேண்டும்.

இறுதி, என்னுரை – உன் முன் ஒரு சாமானியன் முடியாதென்றால் நில்..கவனி..தாக்கு..மூலதனமே ஆட்டம் காண வேண்டும்.

                                                 இப்படிக்கு,

                                                 என் பெயர்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #thriller #intelligence #sujatha #nil-kavani-thaakku

want to buy : http://www.noolulagam.com/tamil-book/5150/nil-kavani-thaakku-book-type-novel-by-sujatha/

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: