“தவறைத் தவறுதலாகத் தவறாக செய்யும் போது அதனால் விளையக் கூடிய நன்மை நீண்டநாள் நீடிக்காது..”
இரவு 11.30 மணி.. இன்ஸ்பெக்டர் கோகுல்நாத்திற்கு புரொபசர் நாத்திடமிருந்து போன் வருகிறது. தன்னுடைய வீட்டு மாடியில் யாரோ நடப்பது போன்ற சத்தமும், மாடிக்கு சென்று பார்த்தால் அறை வெறுமையாக இருந்தது என்றும் புரொபசர் நாத் கூற, திகைத்த கோகுல்நாத் விவேக்கையும் கூட்டிக் கொண்டு அந்த ராத்திரி வேளையில் பணிக்கர் பங்களாவிற்கு சென்றபோது ஒரு சத்தமும் கேட்கவில்லை. ஆனால், மறுநாளே புரொபசர் நாத் கொலை செய்யப்பட ஜமீன் பணிக்கரின் ஆவி தான் கொன்றதாக ஊர் நம்பியது. இதை உறுதிபடுத்தும் விதமாக இருந்தது, அங்கிருந்த பணிக்கரின் போட்டோவில் அவருடைய வாயிலிருந்து வழிந்த ரத்தம்.
இதனால் அந்த பங்களாவிற்கு குடிவர பலரும் பயந்து வந்த நிலையில், ரிடையர்ட் லெப்டினன்ட் சுரேந்திர குப்தா அந்த ஆவி விவாகரத்தை நம்பாமல் தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் பணிக்கரின் பங்களாவிற்கு குடிவருகிறார். ஒரே வாரத்தில் குப்தாவின் மகள் லீனாவும் அதே மாதிரி கொலை செய்யப்பட்டாள். குப்தாவின் குடும்பம் அங்கிருந்து வெளியேறிய பிறகு யாரும் அந்த பங்களாவை எட்டிப் பார்க்காத நிலையில், மூன்றாவதாக பணிக்கரின் மகன் வெங்கட்குமாரும் கொலைசெய்யப்பட..
மூன்று பேரையும் கொன்றது பணிக்கரின் ஆவியா? கொலைக்கான காரணம் என்ன? கொலையின் பின்னாலிருந்த உண்மை என்ன? விவேக் கொலையின் அமானுஷ்யத்தைக் கண்டுபிடித்தாரா? அமானுஷ்யத்தை ஆராய நேரடியாகக் களமிறங்கும் விவேக். திகில் திருப்பங்களுடன் பரபரவென்று நகரும் கதையில் பயத்திற்கு பஞ்சமில்லை.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #kaatru urangum neram
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=673