#3 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. தெற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நாடு.
  2. 1990-ல் தென்னாப்பிரிக்காவிடமிருந்து விடுதலை பெற்றது.
  3. சிறுத்தைகள் அதிகம் இருக்கும் 6 ஆப்பிரிக்க நாடுகளில் இதுவும் ஒன்று.
  4. ‘துணிச்சல் மிக்க நாடு’ என்ற பெயரும் இதுக்கு உண்டு.
  5. வைரம், செம்பு, யுரேனியம், தங்கம், காரீயம், லித்தியம் போன்றவை இந்த நாட்டின் இயற்கை வளங்கள்.
  6. இதன் தலைநகரம் விந்தோக்.
  7. அரசியல் அமைப்புச் சட்டத்தில் சுற்றுச் சூழல் பாதுகாப்பை அறிமுகப்படுத்திய முதல் நாடு இதுதான்.
  8. இந்த நாட்டின் தேசிய விலங்கு ஆப்பிரிக்க இரலை (Oryx).
  9. இங்குள்ள மிக உயரமான மலை பிரான்ட்பர்க்.
  10. உலகின் பழமையான பாலைவனங்களில் ஒன்றான நமீப் பாலைவனத்தின் பெயரைத்தான் இந்த நாட்டுக்கும் வைத்திருக்கிறார்கள்.

இந்தப் பத்து கேள்விகளும் ஒரு நாட்டைக் குறிக்குது. முடிஞ்சா தேடிக் கண்டுபிடிங்க! முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க!!

கமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..

மேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #challenge #general knowledge #quiz

5 thoughts on “#3 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: