பிளஸ் 1

புத்தகத்தோட பேரைப் பாத்த உடனே எல்லாரும் விழுந்தடிச்சிட்டு ஓடாதிங்க.. இது கண்டிப்பா நீங்க நினைச்ச மாதிரி ஸ்கூல் புத்தகம் இல்லீங்க.. உங்களோட ஆளுமைப்பண்பை வளத்துக்க உங்களுக்கு கிடைச்ச அரிய பொக்கிஷம்.

மொதல்ல ‘ஆளுமைப்பண்பு’ அப்படின்னா..?

உங்களோட கேள்வி எனக்கு நல்லாவே புரியுது. தனிப்பட்ட ஒருவரின் சிறந்த நடத்தையும், செயல்பாடுமே ஆளுமைப்பண்பு. உதாரணத்துக்கு நீங்க இப்ப ஒரு சாதாரண வேலைல இருக்கீங்க, அந்த இடத்துலருந்து உயர்வான எடத்துக்கு நீங்க போகணும்னு ஆசைப்படறீங்க. ஆனா, அதுக்காக நீங்க எந்தளவுக்கு உழைக்க வேண்டியதிருக்கும்னு உங்களுக்கே தெரியும், இருந்தாலும் ஒருவித தயக்கம். இலக்கைத் தீர்மானிச்ச உங்களுக்கு, அதை எப்படி அடையறதுன்னு தெளிவான சிந்தனை இல்ல. வெற்றிக்கு அவசியமான ஆளுமைப்பண்பே இலக்கு நிர்ணயித்தல் தாங்க. நிறைய பேருக்கு தங்களோட இலக்கே என்னன்னு தெரியாதப்போ, எப்படி அதுக்கான பாதையை மட்டும் கண்டுபிடிக்க முடியும்..?

ஒரு வேலையை செய்ய ஆரம்பிக்கும்போது தேவைப்படற prioritization-லருந்து, அந்த வேலையை எப்படி செஞ்சா சிறப்பா முடிக்கலாம்னு முடிவெடுக்கற(decision making) வரைக்கும் நம்மள பலருக்கு குழப்பங்கள் இருக்கும். ஒரு விசயத்தை மேலோட்டமா அரைகுறையா பாக்கறதை நிறுத்திட்டு, வேரூன்றி ஆழமா பாத்து, முக்கியத்துவம் குடுக்கவேண்டிய எடத்துக்கு குடுத்து, அந்த விசயத்தை செயல்படுத்தும்போது நமக்கே தெரியாம அந்த விசயத்துல நிபுணத்துவம் அடைஞ்சிட்டு வர்றது புரியும். இப்படி நம்மள நமக்கே அடையாளம் காட்டறது தான் என்.சொக்கன் எழுதிய +1 புத்தகம்.  இந்தப் புத்தகத்தைப் படிச்சு முடிக்கும்போது, ஒரு சின்ன முன்னேற்றம் ஏற்படறதை உங்களாலேயே நல்லா உணர முடியும். சுலபமான உதாரணங்களை வெச்சு சிக்கலான விசயங்களை விளக்கறதே இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #self help #self development #n.chokkan #plus one #+1

want to buy : http://www.pustaka.co.in/home/ebook/tamil/plus-1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: