வினயா ஒரு விடுகதை – Crime Novel

“மாயைகளைத் தோற்றுவிப்பதன் மூலம் உண்மைக்குத் திரை போட முடியாது..”

டி.ஜி.பி மார்த்தாண்டத்துடன் விவேக் பார்த்துக்கொண்டிருந்த வீடியோவில் காட்டின் பின்னணியில் இருட்டில் நான்கு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த விபரீதமான சம்பவம் ஓடிக் கொண்டிருந்தது. வீடியோவிலிருந்த பெண்ணை எங்கேயோ பார்த்த ஞாபகம் விவேக்கிற்கு வர அவள் அக்னிபுத்ரி என்பதையும், டிடெக்டிவ் ஏஜென்சியில் வேலை பார்ப்பவள் என்பதையும் நினைவிற்குக் கொண்டு வருகிறான் விவேக்.

ஆனால், கொலை செய்யப்பட்ட அக்னிபுத்ரி உயிரோடு இருக்கிறாள். கொலை செய்யப்பட்டது அச்சில் அக்னிபுத்ரி போலவே இருக்கும் அவளுடைய தங்கை பொற்கொடி எனத் தெரியவருகிறது. அவளுடைய அறையை சோதனை செய்த போது போலீசாருக்கு ஒரு வித்தியாசமான டெலிகிராம் கிடைத்தது. அதிலிருந்த குழப்பும் வார்த்தைகள் கேஸை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது. அறையில் எதேச்சையாகக் கிடைத்த சாவி எதற்குரியது என்பதும் புரியாத புதிராக இருந்தது.

இறுதியில் கொலையாளியைக் கண்டுபிடிக்க விவேக் எடுத்த முயற்சிகள் கைகொடுத்ததா? பொற்கொடி ஏன் கொலை செய்யப்பட வேண்டும்? டெலிகிராமில் இருந்த குழப்பம் தீர்க்கப்பட்டதா? அந்த சாவி எந்த  விபரீதத்திற்கானது? விறுவிறுப்பான பின்னணியில் கதையில் ஏற்படும் திருப்பங்கள் படிப்பவர்களைத் திணறடிக்கச் செய்து விடும்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #vinaya oru vidukadhai

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=80

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: