மதுரை புத்தகத் திருவிழா 2019

7,00,000 வாசகர்கள், 2,00,000 தலைப்புகள் மற்றும் 250 அரங்குகளுடன் வெற்றிகரமான 14-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மதுரை புத்தகத் திருவிழா, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், 30/08/2019 தொடங்கி 09/09/2019 வரை மொத்தம் 11 நாட்கள்  நாள்தோறும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை, மதுரை தமுக்கம் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

10% சிறப்பு தள்ளுபடியில் புத்தகங்களை வேட்டையாடலாம். குறிப்பிட்ட சில புத்தகங்களுக்கு 50% வரை தள்ளுபடி உண்டு.

நிகழ்ச்சித் தொகுப்பு:

30/08/2019 முதல் 09/09/2019 – சிறப்பு விருந்தினர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள்.

01/09/2019 முதல் 09/09/2019 – எழுத்தாளர்கள்-வாசகர்கள் சந்திப்பு(அரங்கு 197).

01/09/2019 – ‘குறள் விருந்து கதை விருந்து’ புத்தக வெளியீடு.

03/09/2019 – ‘தமிழக வெகுசன இசையும் அரசியலும், அரசியலற்ற        இசையும்’ புத்தக வெளியீடு.

05/09/2019 – மதுரை படைப்பாளிகளின் பத்து நூல்கள் அரங்கேற்ற விழா.

06/09/2019 – ‘அறிவு பற்றிய தமிழரின் அறிவு’ புத்தக வெளியீட்டு விழா.

01/09/2019, 03/09/2019, 05/09/2019 மற்றும் 06/09/2019 – மாணவர்களுக்கான ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி மற்றும் வினாடி வினா போன்றவை நடைபெறும்.

இம்முறை மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு நூல்கள் வெளியிடப்படுகின்றன. சிறப்பு மற்றும் புதிய நூல்கள் வெளியிடப்பட உள்ளது.

அனைவரும் வருக! அனுமதி இலவசம்!!

way to madurai book festival

#one minute one book #tamil #book #review #madurai #book festival #2019

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: