- மிகப்பெரிய எண்ணெய்க் கிணறுகளைக் கொண்ட நாடு.
- உலகின் மிக உயரமான ஏஞ்சல் அருவி உள்ள நாடு.
- இந்த நாட்டின் தேசியக் கொடியில் உள்ள மஞ்சள் நிறம் நில வளத்தையும், நீல நிறம் விடுதலையையும், சிவப்பு நிறம் விடுதலைப் போராட்ட வீரர்கள் சிந்திய ரத்தத்தையும் குறிக்கின்றது.
- 1854-ஆம் ஆண்டே அடிமை முறையை ஒழித்து சாதனை செய்த நாடு இது.
- இந்த நாட்டின் சிறப்பு உயிரினங்கள் – ராட்சத எறும்புத்தின்னி, அமேசான் டால்பின்.
- தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு இது.
- இதன் தலைநகர் கராகஸ்.
- அமெரிக்கக் காலனி நாடுகளில் ஒன்றாக 1811 வரை இருந்தது.
- இந்த நாடு 1811-ல் சுதந்திரம் அடைந்தது.
- சிமோன் பொலிவார் தேசத் தந்தையாகக் கருதப்படுகிறார்.

இந்தப் பத்து கேள்விகளும் ஒரு நாட்டைக் குறிக்குது. முடிஞ்சா தேடிக் கண்டுபிடிங்க! முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க!!
கமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..
மேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #challenge #general knowledge #quiz
சரியான விடை – வெனிசுலா
Correct Answer – Venezuela