#2 மூளைக்கு வேலை (IQ)

  1. ராஜேஷ் கடற்கரை வழியே சென்று கொண்டிருந்தான். அவனின் வலது பக்கத்தில் சூரியன் மறைந்து கொண்டிருந்தது. ராஜேஷ் எத்திசையை நோக்கிச் சென்றான்?
  2. எலியிடமிருந்து எடுத்த வைரஸ் கிருமியை நீர் நிரம்பிய ஒரு கிளாஸில் போட்டால், வினாடிக்கு விநாடி இரு மடங்காகும். ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி அப்படியே அதிகரிக்கும். கிளாஸ் மொத்தமாக வைரஸ் கிருமியால் நிரப்புவதற்கு முப்பது வினாடிகள் ஆனது என்றால், அந்த கிளாஸின் அரைப்பங்கு நிரம்ப எவ்வளவு நேரம் ஆகும்?
  3. இராமனுக்குச் சீதை என்றிருந்தபோது, அரிச்சந்திரனுக்குச் சந்திரமதி இருந்தாள். சந்திரமதிக்குச் சீதை இல்லை என்றாகியபோது, இராவணனுக்குச் சந்திரமதி அல்லது சீதை என்றாகியது. எனவே-
  1. இராமனுக்குச் சீதை என்றிருந்தபோது, இராவணனுக்கு சந்திரமதியோ சீதையோ இல்லை.
  2. அரிச்சந்திரனுக்குச் சந்திரமதி என்றிருந்தபோது, சீதை அல்லது சந்திரமதி இராவணனுக்குரியதாகியது.
  3. இராமனுக்குச் சீதை இல்லையென்றாகியபோது, இராவணனுக்கு சந்திரமதியுமில்லை சீதையுமில்லை.

இக்கூற்றுக்களில் எது சரியானது?

மேலே உள்ள கேள்விகள் உங்கள் ஆய்ந்தறியும் திறனை(IQ) சோதிக்கும் வகையில் உள்ளது. சிலர் குதர்க்கமான பதில்களைக் கூட கூறலாம். உதாரணத்திற்கு வைரஸ் கிருமிகளைப் பரப்பறது தப்புன்னும் குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்காதீங்கன்னு கூட சொல்லலாம். இதெல்லாம் ஒதுக்கி விட்டு சிந்தித்து செயலாற்றுங்கள்.

விடைகள் அடுத்த வாரம். மூன்றிற்கும் சரியான பதில் அனுப்புபவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது!!

#one minute one book #tamil #book #review #aptitude #quiz #puzzle #riddle

One thought on “#2 மூளைக்கு வேலை (IQ)

Add yours

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: