ரத்தத்தில் ஒரு ராத்திரி

“கூடா நட்பு குடும்பத்தையும் கெடுக்கும், உயிரையும் கொல்லும்..”

வெளிநாட்டில் இரண்டு வருடக் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு, யூனிவர்சிட்டி நண்பன் ஹேமச்சந்திரனுடன் மெட்ராஸ் வருகிறாள், ஸிம்ஹா. விமான நிலையத்தில் தன்னை வரவேற்க அக்கா-அத்தானுடன் வருவாள் என்று எதிர்பார்த்திருந்த ஸிம்ஹாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. கோபத்துடன் தன் அக்கா வீட்டிற்கு சென்ற ஸிம்ஹாவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவளுடைய மாமா தயாநிதி ஹார்ட் அட்டாக்கினால் இறந்துவிட்டதை அறிந்த ஸிம்ஹா அது இயற்கையான மரணம் இல்லை என நம்புகிறாள்.

தயாநிதி இயற்கையாக இறக்கவில்லை, கொலை செய்யப்பட்டார் என நம்பிய தயாநிதியின் ஃபிரெண்ட் ராஜீவும் ஸிம்ஹாவுடன் சேர்ந்து கொலையைக் கண்டுபிடிக்கத் திட்டமிடுகின்றனர். குடும்ப டாக்டரிடம் விசாரித்த போது அது இயற்கை மரணம் என வாதிட்டு அவர்கள் வெளியேறிய பின்பு யாருக்கோ போன் செய்து பேச, டாக்டர் ஏதோ மறைக்கிறார் என்பதை அறிந்த இருவரும் மேற்கொண்டு சில நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தயாநிதியின் கடந்த காலத்தை நூல் பிடித்து சென்ற போது விஜேஸ் என்ற கதாப்பாத்திரத்தைக் கதையோடு பிணைக்கிறது.

தயாநிதியின் மரணம் இயற்கையா? குடும்ப டாக்டர் மறைத்த விஷயம் என்ன? மரணக் கதை என்ன? தயாநிதிக்கும் விஜேஸுக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? தயாநிதியின் கடந்த காலத்தில் நிகழ்ந்த விபரீதம் என்ன? இயல்பான வேகத்தில் நகரும் கதை.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #ratthathil oru raathiri

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=656

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: