கறுப்பு மலர்கள்

“தலைப்புகள் தமிழ் மரபுக்குப் புதியவை.

கவிதைக்கான கருவும் புதுமையானதே.

புதுமையின் தோற்றம் முதலில் குழப்பத்தைத் தரும்.

படிக்கப் படிக்க மயக்கத்தைத் தரும்.

மயக்க வைக்கும் சொற்சித்திரங்கள் இவை.”

வடக்கத்தி மங்கையர்போல் முழுக்கவும் மூடாமல், கேரளமாதர் போல் முழுக்கவும் திறந்துவிடாமல், தமிழகப் பெண்கள் போல் ஒதுங்கியும் ஒதுங்காமல் அழகு காட்டும் கவிதைகளை இதில் நாம் காண்கிறோம்.

                                              -கவியரசர் கண்ணதாசன்.

நம்முடைய சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களும், விளிம்பு நிலையில் வாழ்ந்து வருபவர்களுமான திருநங்கைகள், கைம்பெண்கள், யாசிப்பவர்கள், ஏழைகள், மாற்றுத்திறனாளிகள், பாலியல் தொழிலாளிகள், ஆதரவற்றோர், முதியவர்கள், மலைவாழ்ப் பழங்குடியினர்கள் மற்றும் கறுப்பினத்தவர்கள் பற்றிய ஆழ்ந்த புரிதலுடன், நா.காமராசன் எழுதிய ஒரு புதுக்கவிதை நூல் ‘கருப்பு மலர்கள்’. புறக்கணிப்பாளர்களைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் வெள்ளைக் கவிதையில் கருப்பு மலர்களாகத் தொகுக்கப்பட்டுள்ளது. நா.காமராசனின் வார்த்தைத் தேர்ந்தெடுப்பு சிக்கலற்று எளிமை ததும்ப படிப்பவரிடம் பேசுகிறது. அனைத்தையும் அனைவரும் படித்து தெளிவு பெற வேண்டிய தூண்டுகோலாக இந்நூல் இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

UPSC மெயின்ஸ் தேர்வில் தமிழை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் நூல் நா.காமராசன் அவர்கள் எழுதிய கருப்பு மலர்கள்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #upsc #mains #syllabus #literature #na.kaamarasan #karuppu malargal

want to read free : https://archive.org/details/dli.rmrl.082666/page/10/mode/2up

want to buy : https://www.panuval.com/karuppu-malargal-10016965

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading