முடிவு எடுத்தல்

“இன்றே முடிவெடுங்கள்..” “சரியான முடிவு உங்கள் வாழ்வை மாற்றும்..” “பாத்ததுமே முடிவு பண்ணிருவீங்க..” இது போன்ற பரிந்துரைகளை நீங்கள் தொலைக்காட்சியிலோ, விளம்பரங்களிலோ பார்த்திருக்கலாம். முடிவுகள் என்பது நமக்கு வாடிக்கையாகிப் போன ஒன்று. ஒருவர் எடுக்கும் முடிவு அவர்களின் திறன், நம்பிக்கை, பொறுப்பு, நுண்ணறிவு போன்றவைகளை பிரதிபலிக்கும். எனவே சில வரம்புகளை, பாதிப்புகளை, சார்த்திருப்பவர்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமே. ஆனால், சொந்த தனிப்பட்ட முடிவுகள் இதிலிருந்து வேறுபடுகிறது. சிலர் மூளையைக் கழுவி ஒரு சிலரைத் தவறான முடிவெடுக்க வைத்து லாபமடைவதும் உண்டு.

முடிவு எடுக்கப்பட வேண்டிய சில சூழ்நிலைகள், உங்கள் குழந்தைகளின் எந்த ஆசையை உடனே நிறைவு செய்வீர்கள்? – ரங்கர் கட்டை ஆட்டத்தில் சிவாஜியா? சாவித்ரியா? ஹார்ட்டினா? டைமன்ட்டா? – உயர்நிலையில் எந்தப் பாடம் தேர்ந்தெடுப்பது? – யாருக்கு ஓட்டு போடுவீர்கள்? – நிறுவனத்தின் நலனுக்கு பங்குகளை வாங்கலாமா? – மரண தண்டனையா? ஆயுளா? – மன்னிப்புக் கேட்கலாமா? – பிச்சை இடுவதா? – தவறுக்கு  மன்னிக்கலாமா?

இதுபோன்ற சிறிய மற்றும் பெரிய சூழ்நிலைகளில் முடிவு எடுக்க தனித்த அறிவும், பொறுமையும் தேவை. தினசரி அசைவுகளில் ஒன்றான முடிவு எடுப்பதின் தன்மையை வெவ்வேறு துருவங்களில் நின்று பல உண்மை சூழல்களின் உதாரணங்களை கைக்கொண்டு எடுத்துக் கூறி தெளிவுபடுத்துகிறார் வெ.இறையன்பு IAS. அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய படைப்பு.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #v.iraianbu #mudivu eduthal #decision making

want to buy : https://www.commonfolks.in/books/d/mudiveduthal

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: