சிங்கப்பூர் விநாடிகள்

“ஒரு பொய்யை இன்னொரு பொய்யே வெல்லும்..”

பக்கா உமனைசரான அண்ணியின் அண்ணன் முகுந்த், தனக்கு மாப்பிள்ளையாக்க நினைப்பதை விரும்பாத இன்பா, தன் அண்ணனை எதிர்த்து எதுவும் பேச முடியாத நிலை. நிலைமை இவ்வாறிருக்க முகுந்த்தும் அவன் தங்கையும் திட்டமிட்டபடியே இன்பா தங்கியிருக்கும் வீட்டிற்கே வந்து ஒரு வாரம் தங்கி செல்ல வருகிறான் முகுந்த். இதற்கு நடுவில் ஃபேஸ்புக்கில் ஃபிரெண்டாகிப் பின் காதலனாய் மாறி தற்போது சிங்கப்பூரில் வேலை செய்யும் குமரேஷிடம் விசயத்தைத் தெரியப்படுத்துகிறாள், இன்பா.

மும்பையில் தோழி திருமணத்திற்கு செல்வதாக முகுந்த்திடம் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டு இன்பா சிங்கப்பூர் செல்கிறாள். சிங்கப்பூர் வந்த முதல் நாளே யாரோ போன் செய்து மிரட்டுகிறார்கள். முகுந்த் தான் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டான் என நம்பும் இன்பா போலீஸின் உதவியை நாடுகிறாள். போலீஸ் மிரட்டல் பேர்வழியைக் கண்டுபிடிக்கும் முன்பே குமரேஷ் விபத்துக்குள்ளாக்கப்படுகிறான், ப்ரெயின் டெத் நிலைக்கு ஆளாக்கப்படுகிறான்.

குமரேஷைக் கொல்ல நினைப்பது ஏன்? போனில் இன்பாவை மிரட்டியது யார்? இது அனைத்திற்கும் காரணம் முகுந்த்தா? விபத்தை ஏற்படுத்தியது யார்? இன்பா-குமரேஷ் திருமணம் நடந்ததா? குமரேஷ் உயிர்பிழைத்தானா? பரபரப்பான கேள்விகளுக்கு விறுவிறுப்பான திருப்பங்கள் பதிலாக அமையும்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #singapore vinadigal

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=552

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: