மர்மமான ஒரு குடித்தனக்காரர்

ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த சுபிர் தத்தாவின் அண்ணன் நிஹார் தத்தா, அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற உயிர்ம வேதியல் விஞ்ஞானி. லேபில் வேலை செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் பார்வையை இழந்துவிட்டார். அப்படியே அவருடைய கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சியும் நின்று விட்டது. இதனிடையில் ஒரு மர்ம நபர் நிஹாரின் அறைக்குள் நுழைந்து எதையோ தேடிய விவரம் சுபிருக்குத் தெரியவர ஃபெலுடாவிடம் உதவி கேட்டு வருகிறார், சுபிர். அழைப்பை ஏற்று சுபிர் வீட்டிற்கு சென்ற ஃபெலுடாவிடம், தன்னுடைய வீட்டில் குடியிருக்கும் இரண்டு குடித்தனக்காரர்களின் வினோத நடவடிக்கைகளைப் பற்றி சொல்கிறார்.

விசாரணை நடந்து கொண்டிருந்த போதே நிஹார் தத்தாவின் ஆராய்ச்சிக் குறிப்புகளும், சேமிப்புப் பணமும் திருடப்படுகிறது. நிஹாரின் அலுவலக செயலாளர் கூறிய ஒரு தகவல் மேற்கொண்டு ஃபெலுடா நடவடிக்கை எடுக்க உதவுகிறது. கேஸ் இப்படி போய்க்கொண்டிருந்த போது, திடீரென பெலுடாவின் வீட்டிற்கு வரும் சுபிர் தத்தாவின் இளைய மகன் தோன்றி ஃபெலுவை மிரட்டி செல்கிறான். அதற்கடுத்த நாளே சுபிர் வீட்டில் குடித்தனமிருந்த இருவரில் ஒருவரான தஸ்தூர் கொலை செய்யப்படுகிறார்.

ஃபெலுடாவின் சந்தேகம் அனைவரிடமும் கேள்விக்கணைகளைத் தொடுக்க, நிஹாரின் ஆராய்ச்சிக் குறிப்புகள் மீட்கப்பட்டனவா? நிஹாரின் ஆராய்ச்சியின் பின்னாலிருந்த உண்மை என்ன? செயலாளர் ஃபெலுடாவிடம் கூறியது கேஸுக்கு எவ்விதம் உதவியது? தஸ்தூர் ஏன் கொல்லப்பட்டார்? அந்த வினோதமான குடித்தனக்காரர்கள் யார்?

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #satyajit ray #feluda # marmana-oru-kudithanakarar

want to buy : https://www.udumalai.com/marmana-oru-kudithanakarar.htm

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: