செயற்கைக்கோள்-எப்படி இயங்குகிறது?

இந்திய மண்ணில் ஏவிய சந்திரயான்-1, சந்திரயான் 2 மற்றும் மங்கள்யான் போன்ற செயற்கைக்கோள்கள் நம்மில் பிரபலமானவை. இவைகளை ராக்கெட்டில் ஏற்றி வழியனுப்பி வைப்பதை மட்டுமே பார்த்திருப்போம். இவைகளைப் பற்றி ஆராய்ந்து தெரிந்து வைத்துக் கொள்ள ஆர்வம் இருந்தாலும் நம்மில் பல பேருக்கு ‘கடினம்’ என்ற வார்த்தைக்கு ‘ராக்கெட் சயன்ஸ்’ என்பதை மாற்றாக வைத்துள்ளோம்.

கூகுள் செய்தாலும் புரிந்து கொள்ள எளிதாக இல்லை. என்னதான் செய்கிறார்கள்? என்னதான் செய்கிறது இந்த செயற்கைக்கோள்கள்? மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தத் துணைக்கோள்கள் ராக்கெட் ஏறி விண்ணுக்குப் பயணம் செய்து நிலவைப் போல் பூமியைச் சுற்றி தினமும் உதித்து மறைகிறது. சில செயற்கைக்கோள்கள் ஒரே இடத்தில் இருந்தவாறு பூமியை சுற்றுகிறது.

இந்த றெக்கை வைத்த விண்வெளிப் பறவைகள் தொலைத்தொடர்பு, தொலைக்காட்சி, இணையம் போன்றவைகளை பூமியில் அர்த்தமுள்ளதாகவும் வானிலை, புவியியல், பாதுகாப்பு தொடர்பான தகவல்களை மனிதனுக்கு மின்காந்த அலைகளாக நொடிக்கு நொடி தரும் தொழில்நுட்ப மைல்கல். இவற்றின் தொழில்நுட்பப் பின்னணியும் வரலாறும், செயல்படிநிலைகளும் விஞ்ஞானிகள் பின் நின்று எளிமை வரிகளாக அமைக்கப்பட்டிருக்கும்.

ப்ராடிஜி வழியாக என்.ராமதுரை எழுத்துக்களில் “செயற்கைக்கோள் எப்படி இயங்குகிறது?”

பின் குறிப்பு : ப்ராடிஜி பதிப்பகம் வரலாறு, அறிவியல், மேதைகளின் வாழ்க்கை வரலாறு, வாழ்வியல், மருத்துவம் போன்ற அவசியத் தலைப்புகளில் குறுங்கட்டுரைகளாக அழகாகத் தொகுக்கப்பட்டு வெளியிடுவது இதன் சிறப்பு.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #prodigy #seyarkaikol-eppadi-iyangugirathu #how-satellite-working #explanation

want to buy : https://www.commonfolks.in/books/d/seyarkaikol-eppadi-iyangugirathu

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: