செம்பு மரங்களின் மர்மம்

‘நினைவுகளின் சங்கிலி’ என்ற அசாதாரண கூற்றை மையமாக வைத்து கோனன் டாயல் உருவாக்கிய ஒரு துப்பறியும் கதாப்பாத்திரம் ‘ஷெர்லாக் ஹோல்ம்ஸ்’. இவரது கதைகள் அவரது நண்பர் வாட்சன் பார்வையில் கதை நகரும் விதத்தில் அமைந்திருக்கும். புகழ்பெற்ற துப்பறியும் கதாப்பாத்திரத்தின் கதைகளில் தென்றல் சோமுவின் தமிழ் மொழிபெயர்ப்பில் ஒன்று ‘செம்பு மரங்களின் மர்மம்’.

வினோத நிபந்தனைகளுடன் தனக்கு வந்த வேலைவாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள எண்ணிய இளம்பெண் தனது பாதுகாப்பு சார்ந்து உதவியைத் தேடி ஷெர்லாக்கை சந்திக்கிறார். தன் வசிப்பிடத்திலிருந்து வெளியேறிச் சென்று வேலை பார்ப்பதற்குப் பணிக்கப்பட்டிருந்த அப்பெண் மர்மப்புன்னகை பொருந்திய ஒருவரின் மகனைப் பார்த்துக் கொள்ள அதிக ஊதியம் கொடுப்பதாகப் பேசப்பட்டது. இருந்தபோதும் பூடகம் நிறைந்த நிபந்தனைகள் அவளை சற்று அச்சத்தோடு வைத்திருந்தது.

“தேவையென்றால் தந்தி கொடுங்கள், நான் உங்களுக்காக வந்து நிற்பேன்” என்ற ஷெர்லாக்கின் வாக்குறுதியின் துணையோடு சென்றாள், அவள். இரண்டாவது வாரம் தந்தி வந்தது, தந்தி கிடைத்த வேகத்தில் கிளம்பினார், ஹோல்ம்ஸ். கதையும் வேகம் பிடித்தது. மர்மப்புன்னகை ஆசாமி, சோகம் நிறைந்த பெண், ஜீவராசிகளைத் துன்புறுத்த ஆசைப்படும் சிறுவன், போதையில் உழலும் வயோதிகர், பட்டினி போடப்பட்ட நாய், நோட்டம் விடும் இளைஞன் இவர்கள் அனைவரும் பாதுகாத்துக்கொண்டிருந்தது பற்றிய ரகசியத்தை ஹோல்ம்ஸால் வெளிக்கொண்டு வரப்பட்டதே ‘செம்பு மரங்களின் மர்மம்’.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #detective story #sherlock holmes #conan doyle #thendral somu #sembu marankalin marmam

want to buy : https://www.goodreads.com/book/show/46899406

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: