ஊசி முனையில் ஓர் உயிர் – Crime Novel

“ஊசி முனையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஓர் உயிர்..மருத்துவமும் விஞ்ஞானமும் நம்மைக் காப்பதற்கா..? அழிப்பதற்கா..?”

மனித உழைப்பை அதிகரிக்கச் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த சக்சேனாவும் அவருடைய மனைவி வினயாவும் நிருபர்களுக்கு தங்களுடைய ஆராய்ச்சி பற்றிய பேட்டியை முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பும் வேளையில், சிபிஐ ஆபிசரை உடன் அழைத்து வந்திருந்த  விக்ரம் அவர்களை மறித்து அவர்களின் ஆராய்ச்சி சட்டவிரோதமானது என சண்டையிடுகிறான். இந்நிலையில் விக்ரம் அவர்கள் மூவரால் கொலை செய்யப்படுகிறான்.

சக்சேனாவும் வினயாவும் ஆராய்ச்சி செய்வதற்கு தங்களுடைய ஆபிசில் வேலை செய்யும் ரமாவையே பரிசோதனை எலியாக உபயோகப்படுத்துகிறார்கள். இந்த உண்மை தெரியாத ரமா ஆராய்ச்சியின் பிடியில் சிக்கி இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுகிறாள். விட்டமின் மாத்திரை என்ற பெயரில் பரிசோதனை மாத்திரைகளை உட்கொள்கிறாள். நிலைமை இவ்வாறிருக்க வேறொரு மருத்துவரை அணுகும் ரமாவிற்கு தன் உடலின் உண்மை நிலையும், அதற்கான காரணமும் தெரியவருகிறது. சக்சேனாவின் முகத்திரையைக் கிழிக்க சென்ற ரமா, அவர் டைனமைட் வைத்துக் கொல்லப்பட்டதை அறிந்து அதிர்ந்து போகிறாள். இதே முறையில் சிபிஐ ஆபிசரும் கொல்லப்படுகிறார்.

விக்ரம் கண்டுபிடித்த உண்மை என்ன? இருவரின் மரணத்திற்குத் தூண்டுதலாக இருந்த செயல் எது? ரமா உயிர் பிழைத்தாளா? கொலைக்கான டைனமைட்டின் சொந்தக்காரன் யார்? வினயா என்ன ஆனாள்? பரபரப்பான சூழலில் திகிலுடன் நகரும் கதை.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #oosi munaiyil oor uyir

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=760

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: